பிரபல பிரித்தானிய இசை கலைஞர் எல்டன் ஜான் தனது "எல்டன் ஜான் லைவ், ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் காணொளிக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ஈகோட் பட்டியல் என்பது எம்மி, கிராமி, ஆஸ்கார், மற்றும் டோனி ஆகிய விருதுகளின் சுருக்க பெயராகும்.
குறித்த பட்டியலி்ல் ஜெனிபர் ஹட்சன், மெல் ப்ரூக்ஸ், ஜான் லெஜண்ட், ஹூபி கோல்ட்பர்க், ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற புகழ்பெற்ற...
முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த அழகான கண்டமாக அன்டார்க்டிகா காணப்படுகின்றது.
இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a). இந்த பனிப்பாறை 1986களிலேயே அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.
சுமார் 30 ஆண்டுகளாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியின் அதிரடி அறிவிப்பு!
Thinappuyal News -
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இவ்வாறான நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். மேலும்,...
ஹமாசுக்கு எதிரான போருக்காக, இஸ்ரேலியப் பெறுமதிக்கமைய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் சட்டத் திருத்ததிற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போர் நூறு நாட்களை கடந்துள்ள நிலையில், பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து, அமைச்சரவையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றது.
இறுதியில், நடப்பு ஆண்டு போருக்காக மட்டும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி...
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொடர்மாடி வீடுகளுக்கான வாடகை தொடர்ச்சியாக சரிவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ரொறன்ரோவில் சராசரி குடியிருப்பு ஒன்றின் வாடகையானது குறைவடைந்துள்ளது.
ரென்டல்ஸ்.சீஏ என்னும் ரியல்எஸ்டேட் இணையதளத்தின் ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் தடவையாக வாடகையில் சரிவு பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் வாடகை குறைவடைந்திருந்தது.
ஒராண்டுக்கு முன்னர் இருந்த...
வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா செய்தார்.
நியூசிலாந்துக்கு அகதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார்.
43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார்.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ஓக்லாந்தில் உள்ள...
கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிர் காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும் மிக மோசமான குளிருடனான வானிலை பதிவாகவில்லை.
எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து பாகை செல்சியஸை விடவும் அதிக குளிருடனான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் முகவத்தின் வானிலை ஆய்வாளர் பீட்டர் கிம்பல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சராசரியாக மறை 9 பாகை செல்சியஸ் முதல்...
நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு இராணுவத்தின் நிதி நிலைமை புவியியல் இருப்பிடம் உட்பட் 60 காரணங்களை ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் முதல் பத்து நாடுகள் பட்டியல் விவரம்:
1)அமெரிக்கா
2)ரஷ்யா
3) சீனா
4) இந்தியா
5) தென்கொரியா
6)பிரிட்டன்
7)ஜப்பான்
8)துருக்கி
9)பாகிஸ்தான்
10)இத்தாலி
குறைந்தளவு இராணுவ வலிமையுள்ள நாடாக பூட்டான் பதிவாகியுள்ளது.
பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் இன்று (16.1.2024) பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கோசங்கள்
இப்போராட்டத்தின் போது மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்து, எமது பசுக்களை துன்புறுத்துவதையும், நிலங்களை ஆக்கிரமித்தலையும் உடனடியாக நிறுத்து, வாயில்லாத ஜீவன்களுக்கு வாயில் வெடிவைக்கும் கொடூரர்களை உடனடி கைது செய்.
மற்றும் பசுக்களைத் தெய்வமாக வழிபடும்...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக உள்ளது என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (16.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தீவிபத்து சம்பவம்
கடந்த வருடம் ஊடகங்கள் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்திருந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினை அணைக்க முடியாமல் யாழ்ப்பாணத்திலிருந்து வாகனத்தினை கொண்டுவந்து தான் தீயினை...