படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வியாபாரி ஒருவரைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தொடர் விசாரணை இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வாழைத்தோட்டப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும்...
  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (16.01.2024) இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் பகுதியினை சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டுள்ளார்கள். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை...
  புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (16.01.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது. தேசிய நன்னீர் மீன் உற்பத்தி மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக விடப்பட்டுள்ளன. தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின்...
  கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத் தொலைபேசிகளை அணுகி தரவுகளை திருடியதாக அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆன்லைன் கடன் இந்த ஆன்லைன் கடன் வழங்கும்...
  கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி ஒருவர்...
  டெங்கு நோய் தாக்கம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான ஹஸினி (23) என்பவரே உயிரிழந்துள்ளார். ஹொரணை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார். டெங்கு நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படும் போது அவர், சுயநினைவை இழந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். அண்மையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான...
  இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டென்ட் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஸ்டென்ட் என்பது நரம்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் உடல் திரவங்களின் தடையற்ற ஓட்டத்தை அனுமதிக்க அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்படும் ஒரு சிறிய குழாய் ஆகும். இறக்குமதி செய்ய...
  அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்காட்டியுள்ளது. குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், அதிக விலைக்கு எரிவாயுவை...
  முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளின் நடுத்தர வயதுடையவர்களிடமே இந்த நிலைமையை அதிகம் இனங்காண முடியும். இலங்கையில் கோவிட் அனர்த்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை போன்ற சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் இந்த நிலைக்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்...
  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெங்கு நோயாளர்கள் அடையாளம் இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1,122 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பை அடுத்து யாழ். மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...