ஜெர்மனியில் விவசாய மானிய வெட்டுகளைக் கண்டித்து ஒரு வார காலமாக தலைநகர் பெர்லினை தங்களது போராட்டங்களின் மூலம் ஸ்தம்பிக்க வைத்தனர் ஜெர்மன் விவசாயிகள். டிராக்டர்களைக் கொண்டு நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன. கடந்த டிசம்பரில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, விவசாய வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீக்குவது குறித்த முடிவை அரசு மாற்றியது.டீசல் மானியம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை என்று...
  தற்போது பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் கொடிய நிபா வைரஸுக்கு, பிரித்தானியாவிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். நிபா வைரஸ் ஒரு பேரழிவு நோயாகும், இது சுமார் 75 சதவீத வழக்குகளில் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிபா...
  கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தைப்பொங்கலை முன்னிட்டு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடாவிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அறுவடைத் திருவிழாவென்று அறியப்படும் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலின் போது அமோக விளைச்சலுக்கு நன்றி பாராட்டுவதற்கும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உறவினர்களும் நண்பர்களும் ஒன்றுகூடுவார்கள். மகிழ்ச்சி, அமைதி, சமூகம் ஆகியவற்றுக்கான இந்தக் காலத்தில் பொங்கல் பொங்கப்படும் அரிசியும் பாலும் சேர்ந்த பாரம்பரிய உணவான பொங்கல் நல்வாய்ப்புக்கும், எதிர்வரும்...
  ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முழுவதிலும் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த காற்றுடன் மறை 20 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உணரப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.எதிர்வரும் 22ம் திகதி வரையில் இவ்வாறு குளிருடான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
  கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார். டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள். படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துள்ளார் ஜாஸ்மின்....
  இறந்து விட்டதாக கூறிய நபரின் உடல் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்சில் கொண்டு வரும்போது அவர் உயிர்பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியானா மாநிலத்தை சேர்ந்த 80 வயதான தர்ஷன் சிங் ப்ரார் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து அவரின் உடல் ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட போது ஆம்புலன்சில் தர்ஷன் சிங்கின் பேரனும் உடனிருந்துள்ளார். உடல் ஆம்புலன்சில் கொண்டு...
  ரொறன்ரோ நகரில் தொடர்மாடி வீடுகளுக்கான வாடகை தொடர்ச்சியாக சரிவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ரொறன்ரோவில் சராசரி குடியிருப்பு ஒன்றின் வாடகையானது குறைவடைந்துள்ளது. ரென்டல்ஸ்.சீஏ என்னும் ரியல்எஸ்டேட் இணையதளத்தின் ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் தடவையாக வாடகையில் சரிவு பதிவாகியிருந்தது. அதன் பின்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் வாடகை குறைவடைந்திருந்தது.ஒராண்டுக்கு முன்னர் இருந்த தொகையை...
  மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி...
  இளவாலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) திருட்டு வழக்குகளில் தலைமறைவாகியிருந்த இளவாலை நாதவோலை பகுதியினை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்ய சென்றபோது சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸார் விசாரணை குறித்த சந்தேநபரை கைது...
  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட போதைக்கு அடிமையான இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்றையதினம் (15.01.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை இதனையடுத்து சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட போதை பாவனை தொடர்பான மருத்துவ பரிசோதனையின் போது குறித்த இரு நபர்களின் கிராம சேவையாளர் ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் மற்றையநபர் ஹெரோயினுக்கு...