முகத்துவாரம் ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது இன்று (15.01.2024) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் இ.போ.ச பேருந்துடன் மோதியே விபத்து நடைபெற்றுள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய...
  இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, நிறுவனத்திடமிருந்து எட்டு கணினிகள், பதின்மூன்று மடிக்கணினிகள் மற்றும் 41 தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப் புலனாய்வுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால்...
  தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றுமுன்தினம் (14.01.2024) காலை 10.00 மணியளவில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளையும் பொலிசார் பரிசோதனைக்குட்படுத்தினர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்த...
  போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் கடந்தாண்டு 800இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விமான இரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பல சந்தர்ப்பங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவை 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆறு A-350 ரக...
  பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது நாளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது. இதன் போது பண்ணையாளர்கள் பொங்கல் பானையில் கறுப்பு நிற துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டடு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைப்பினர் மேலும், இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பிலுள்ள...
  வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இநத நடவடிக்கையால் ஏற்கனவே மருத்துவமனை கட்டமைப்பை பாதித்துள்ளது. வைத்தியர்களின் கொடுப்பனவுகள் 35000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த...
  மகிந்த ராஜபக்சவின் வீட்டிற்காக 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டர்) மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு புதிய வற் வரி சேர்க்கப்படவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். இந்த மின் உற்பத்தி இயந்திரத்தை அந்த வீட்டிற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐம்பது மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டில் அது கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபையின்...
  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டணி சேரப் போவதில்லை கடந்த நவம்பர் மாதமளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு 50 வீத மக்கள் ஆதரவு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வராது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு...
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும் சுவாச நோய் எனவே, சுவாச நோய் அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...