வாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளம் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
  வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காகச் அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. கணவன் வேலைக்குச் சென்ற நிலையில் தனித்திருந்த குறித்த பெண் மீதே மர்ம கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பெண் இறுதிப் போரில் காலொன்றை இழந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில்...
  நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன. தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான முறையில் குடும்பமாக கொண்டாட வேண்டும் என்பதற்றகாக இந்த தீர்மானத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.
  கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா வெற்றி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன்...
  இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைவர் David Teeger நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, டேவிட் டீகர் பாலஸ்தீன ஆக்கிரமிப்பில் இஸ்ரேலிய வீரர்களை ஆதரிப்பது பற்றி கருத்து தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் அடுத்த வாரம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் டேவிட் டீகர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதே சமயம் உலக கோப்பை அணியில் இருந்து...
  இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 25ஆம் திகதி தொடங்குகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். தமிழக வீரர் அஸ்வினுடன்,...
  விஜய் கெரியரில் முக்கிய ஹிட் படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி தான் விஜய்க்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்து இருப்பார். காதலுக்கு மரியாதை படத்தில் வரும் பாடல்களும் பெரிய ஹிட். 'என்னை தாலாட்ட வருவாளோ' பாடல் தற்போதும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. நிராகரித்த ஹீரோ.. வாய்ப்பை பெற்ற விஜய் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் அப்பாஸை தான் இயக்குனர் பாசில்...