இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசிக்கு, இலங்கை வாழ் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கடப்பாட்டை நினைவுறுத்துகின்றேன் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். தற்போது சென்னையில் அயலக தமிழர் மாநாட்டில் தமிழக அரசின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் சென்னையிலிருந்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "இலங்கை - பிரித்தானிய வரலாற்றில் கறுப்புப்...
  தொடருந்து கடவையில் தொடருந்துடன் சிறிய ரக லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(12.01.2024) மட்டக்களப்பிலிருந்து மாஹோ நோக்கிப்பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறியொன்று மோதி இடம்பெற்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை மேலும், லொறியின் சாரதி காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஒவ்வோர் எழுத்தும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் உறுப்புரைகளுக்கு முரணானது என தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் எனினும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செப்டெம்பர் 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான...
  ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். சுவிஸிற்கு விஜயம் எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்த உள்ளார். இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சுவிட்சர்லாந்து...
  ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவினை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12.01.2024) இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரி அதிகரிப்பு நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...
  வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த ஒருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. சினமன் கிராண்ட் ஹோட்டலின் உணவகப் பிரிவின் முகாமையாளர் என்று கூறப்படும் ஸ்டீவர்ட் பெரேரா என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கலாநிதி நாமல் பண்டார பலாலே நேற்று வழங்கியுள்ளார். தண்டனை பிரதிவாதி குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நபருக்கான...
  இரட்டை குடியுரிமை கிடையாது என புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக்க தெரிவித்துள்ளார். தாம் ஒர் இலங்கைப் பிரஜை எனவும், தனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாத்திரம் அவுஸ்திரேலிய வதிவிட வீசா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது மனைவியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவியும் உறவினர்கள் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இருப்பினும், உறவுமுறையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திடீரென பதவி...
  மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும்16 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்து. வெள்ள அபாயம் இந்நிலையில் நேற்று(12) கூடிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் நீண்ட ஆலோசனைக்களுக்கு அமைவாக கல்வி நடவடிக்கைகளை மேலும் நீடித்து...
  தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். Liposuction என்ற சத்திரசிகிச்சை சுமார் மூன்று மணித்தியாலங்கள் எடுத்ததாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஜயவர்தன தெரிவித்தார். சத்திரசிகிச்சை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையான 61 வயதுடைய பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும், எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் வைத்தியர்...
  அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் அதிகபட்ச மொத்த விலையாக 900 ரூபாவும், அதிகபட்ச சில்லறை விலையாக 1,100ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 280 ரூபாவாகவும், சில்லறை விலை ரூ.280 முதல் ரூ.320 ஆகவும் உள்ளது. அதிகபட்ச விலை இதேவேளை இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை...