உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில் மாடுகளை வளர்க்க தொடங்கி உள்ளேன். உலகின் உயர்ந்த தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது குறிக்கோள் என கூறி உள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க்கின் பண்ணையில் மாடுகளுக்கு மக்காடாமியா உணவுகளை சாப்பிட கொடுப்பதாகவும், குடிப்பதற்கு பீர் வழங்குவதாகவும் கூறி...
  கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மாகாணத்தில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மறை 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், எதிர்வரும் சனிக்கிழமை மறை 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு இந்த கடும் குளிருடனான வானிலை மாகாணத்தில் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்வோர் குளிருக்கு தாக்குபிடிக்கக் கூடிய ஆடைகள் மற்றும் அங்கிகளை...
  கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார். விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணி கீழே வீழ்ந்துள்ளார்.விமான நிலையத்தில்...
  ரொறன்ரோவில் உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளார். மேயராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறு வரி அதிகரிப்பு அறிவிக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் கூடுதல் தொகையில் வரி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. ரொறன்ரோ நகர நிர்வாகம் பெருந்தொகை...
  ஈரான்-அமெரிக்கா இடையே நீடிக்கும் மோதல் நிலைமைக் காரணமாக ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான “செயின்ட் நிக்கோலஸ்” என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று (12.01.2024) பறிமுதல் செய்தது. இதுத் தொடர்பில் ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் சூயஸ் ராஜன்' என்ற பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது. ஈரானிய எண்ணெய் பின்னர்...
  மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக்...
  பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் திகதி வரை பாடசாலைகளின் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ...
  ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ஏமன் தலைநகர் சானா உட்பட பல நகரங்களின் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த நவம்பர் 19ஆம் திகதி முதல் செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27 தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த...
  நிதி நிலைமையின் உண்மையை மத்திய வங்கியின் ஆளுநர் மூடி மறைத்தார் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் கையிருப்பு தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். ஆனால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் ஒருபோதும் இந்த நாடாளுமன்றத்திற்கு...
  பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினரை பாதுகாப்பதில் ரணில் விக்ரமசிங்க வெற்றியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டினுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் பதிலாக சொந்த மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சக்களையும், மொட்டுகட்சியையும் பாதுகாப்பதற்காகவே தீவிரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றார். இச்செயற்பாடு நாட்டினுடைய அழிவுக்கு மேலும் அடித்தளம் அமைப்பதாகவே அமைந்திருக்கின்றது என்றும்...