ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒழுக்கம் தொடர்பான விதிகள் ஏற்கனவே, ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை கடைப்பிடிக்காமையினால்...
  முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வரோதயநகர் பகுதியில் இன்று (11.01.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்திற்கான காரணம் யுக்திய செயற்திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த முச்சக்கர வண்டி தடுமாற்றத்தில் நிறுத்த முற்பட்டபோது...
  தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு சமமான நீதி கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று(11.01.2024) ஆரம்பமான 2024 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின் முதல் நாளில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழர்களுக்கு சமமான நீதி அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் - சமமாக நடத்தப்படுவதில்லை. எனினும்...
  பாதுகாப்புக்காக எதற்கு அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் படி 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் விடுதலைப்புலிகளுடனான போர் நிறைவடைந்து தற்போது 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சுகாதாரத்துறையில் உள்ள பிரச்சினைகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ள நிலையில்,...
  நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது நேற்று(11.01.2024) பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது. ஜெகநாதன் என்ற 61 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணை உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா ?என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீண்டும் மீளுருவாகியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்று முன் தினம் சங்கத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது. நிர்வாக தெரிவு இதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக தெரிவுகள் நடைபெற்றுள்ளது. ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கமானது உள்நாட்டு யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் செயலிழந்து...
  வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (11.01.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா zoom செயலி ஊடாக திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். விசேட சுற்றுநிருபம் பொருத்தமான திட்டங்களை இனங்காணவும் நடைமுறைப்படுத்தவும் இம் முறை நிதி அமைச்சு...
  வாழைமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (11.01.2024) பிற்பகல் இடம் பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதோடு சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். உரிய பாதுகாப்பு மேலும் இந்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான...
  ரணில் விக்ரமசிங்கவிற்கு நோபள் விருது வழங்கப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாட்டை பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டமைக்காக இவ்வாறு விருது வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிகள் நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கியிருந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றிருந்தார் . இவ்வாறான ஓர் பின்னணியில் நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்டமைக்காக அவருக்கு நோபள் விருது...
  ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் நேற்றைய தினம் (11.01.2024)யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். நூலகம் பூட்டு இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்...