தெற்காக காற்று சுழற்சியொன்று மையம் கொண்டுள்ளதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது, தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளதால் இன்றும் (10.01.2024) மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காற்று சுழற்சி, மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இன்று(10.1.2024) காலை 9.30 மணிக்கு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழர் தரப்பில்...
வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு வாவிக்கு படகில் மீன்பிடிக்க நேற்று முன்தினம்(08.01.2024) சென்ற நபர் இரண்டு தினங்களின் பின்னர் இன்று(10.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சந்தீவு, நாவற்காடு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுந்தரன் விமலகாந்தன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மாந்தீவை அண்டிய வாவியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு...
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி முப்படைகளின் வசம் உள்ள நிலையில் , அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க...
வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பிரேமிலா ஞானகணேசன் என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்...
வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் படுக்கையின் மேற்கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
4 சகோதர சகோதரிகள் உள்ள குடும்பத்தில் இளையவரான மாணவனின் உடலில் பல இடங்களில் கீறல் காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவன் மரணம்
பொலிஸார் நடத்திய சோதனையில்,...
அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக...
சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது.
நேற்றைய(09) நிலவரத்தின் படி சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.
விலை அதிகரிப்பு
பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரமே சிவப்பு சீன உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்தநிலையில், முந்தைய விலையில் இருந்து பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 390 ரூபாவைத்...
பாடப்புத்தக விநியோகம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய கல்வி தவணை
புதிய கல்வி தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தக விநியோகம் பூரணப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
பதுளை- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் நேற்றிரவு (09.01.2024) உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனர்த்தம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாற்று வீதி
எனினும் தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பேருந்து சேவைகள் நடைபெறுவதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக...