ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது. இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம். நீண்ட கலந்துரையாடல்கள் இது பல ஆண்டுகளாக தாமதமாகி...
  தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். தொடர்ந்து, இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக ஆறு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தடுப்பு...
  வவுனியா வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 06ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும் நேற்றைய தினம் (08) குறித்த கல்குவாரியில் உள்ள நீரில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கல்குவாரியில் உள்ள நீரில் குறித்த நபர் காணாமல் போன நிலையில் அவரின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இந் நிலையில் நேற்று...
  வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும் எனவும் வடக்கு, கிழக்கு, ஊவா,மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மழை...
  2024 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது. பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டில் இயங்கிவரும் நுண்நிதி...
  இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைவர் Craig Ervine அதிகபட்சமாக 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து...
  யுத்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற 'சோட்டா' வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
  தெஹியந்தர பொலிஸ் நிலையப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ரதாவெல, தெய்ந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (08) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீடு மற்றும் விற்பனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உள்​​நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 13 தோட்டாக்கள் மற்றும் வெற்று தோட்டாக்கள் 06 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 05 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம்,...
  இந்த ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். VAT வரியை 18 சதவீதத்தால் அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  2024ம் ஆண்டின் ஜனவரி 1 முதல் 7 ம் திகதி வரை இடம் பெற்றுள்ள டாப் 10 ட்ரெண்டிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம். Samsung Galaxy S24 Ultra Samsung நிறுவனத்தின் Flagship ஸ்மார்ட்போனான Galaxy S24 Ultra 2024 -ம் ஆண்டில் முதல் 7 நாள்களின் ட்ரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜனவரி 17 -ம் திகதி அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய ஆர்வத்தை...