சீனாவின் உளவு அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ். என்ற மாகாண பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஹுவாங் என்ற பெயர் கொண்ட வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ.6 அமைப்புக்காக நீண்ட காலம் உளவு பார்த்துள்ளார்.
அவர் வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு எம்.ஐ.6 அமைப்புக்காக, ஹுவாங், உளவு வேலைகளில் ஈடுபட தொடங்கினார்.
சீனாவில் உளவு வேலை செய்வதற்கும்...
இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் படி,
2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவை மரணத்துக்கான காரணமாக அமைந்துள்ளது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை பாதுகாக்க முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
2011இல் இருந்து 2019...
2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து...
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந் நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.இதனால், ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதேபோன்று, பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கனடாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத் தமிழருக்கு நீதிமன்றம் கடும் அபராதம் !!
Thinappuyal News -
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்ற அதேவேளை, ஒரு சிலரது நேர்மையற்ற செயல் காரணமாக, தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
கனடா ஒன்டாரியோ நீதிமன்றம் அண்மையில் ஈழத் தமிழர் ஒருவருக்கெதிராக வழங்கியிருந்த தீர்ப்பானது, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களை தலை குனிய வைத்துள்ளது.ஈழத்தமிழருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சொகுமனைகள் விற்பனை செய்வதாகக் கூறி சட்டவிரோதமாக ஐந்து மில்லியன் டொலர்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் அடிப்படையில் வீடுமனைகளை...
அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள். எனவே, இவற்றுக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்றையதினம்(7) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில், நாட்டுக்குத் தேவையான நல்லதொரு தலைமைத்துவத்தையும் சிறந்த ஆட்சி, அதிகாரத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, குருநாகல்...
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்தும் மக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும். இன்று நேரடி வரிகள்...
ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த
போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட...
ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி மாலை கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பிரசன்ன குருசிங்க என்ற 42 வயதுடைய நபரும் 38 வயதுடைய கங்கா நில்மினி என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
மரண விசாரணை
உயிரிழந்த தம்பதியினரின் பிரேத பரிசோதனை நேற்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால்...
கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின்போதே இன்று (08.01.2024) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் மீட்பு
இதன்போது கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபரின் வீட்டில் இருந்து100 கிராம் கஞ்சாவும் 10 லீற்றர் கசிப்பும் ஒரு தொகை பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.