அரச பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று (08.01.2024) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் கீழ் அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்பநாய்களுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சோதனை நடவடிக்கை இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான...
  தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் மூன்று வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை வீதம் முன்னெடுக்கப்படும் என சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (08.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மேலதிக தட்டம்மை தடுப்பூசி திட்டம் 83 வீதம் வெற்றியடைந்துள்ளதுடன் மேலும் தடுப்பூசி போட வேண்டிய...
  நாடு முழுவதிலும் பொலிஸார் மேற்கொண்டு வரும்“ யுக்திய” நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதை ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஜனவரி 3ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியின் சாரதியை முதலில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், பின்னர் அதில் பயணித்த ஒரு இளைஞனையும் யுவதியையும் விசாரித்துள்ளனர். பொலிஸாரின் அநாகரீக செயற்பாடு இந்தநிலையில் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்...
பொலிஸார் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. தேடல் நடவடிக்கைகளின் போது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஆணைக்குழு கோரியுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட...
  ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் ஆட்சி செய்த பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் சிறையில் இருக்க வேண்டியவர் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சியொன்று அவசியம் நீதிமன்றினால் குற்றவாளி என...
  வான் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் லொறி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (08.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த நால்வரும் அதிதீவிர நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸாருக்கு கிடைத்த அழைப்பையடுத்து விசாரணைகளை முன்னெடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  
  அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது கணவர் நேற்று முன் தினம் தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
  அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதற்கமைய, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வற் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளவது. வற் வரி என்ற போர்வையில் சில வர்த்தகர்கள்...
  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமல் குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான சுற்றறிக்கை 4 நாட்களில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குத்தகை வாகனங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தினர் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லீசிங் நிறுவனங்கள் குத்தகை மற்றும் கடன் தவணை...
  எதிர்வரும் காலங்களில் நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிறப்பு வீதம், 25 வீதம் குறைவடைந்துள்ளமை பிரதான காரணங்களில் ஒன்று என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். "நம் நாட்டில் ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக, 2013...