டெங்கும் பரவும் அபாயம் உள்ள இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம் செய்யும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. சுத்தம் செய்யப்படும் பகுதிகள், வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான உரிமையாளர்களிடம் அதற்கான பணத்தை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநி்லை காரணமாக டெங்கு தொற்று வேகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு...
  கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடகவெல நகரில் இருந்து முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட யுவதி, கொடகவெல ரன்வல வீதியில் இரண்டு கிலோமீற்றர் பயணித்த போது முச்சக்கரவண்டி சாரதியின் பின் இருக்கையில்...
  இலங்கை நரி ரணில் பணங்காட்டு நரி டக்ளஸ் வடபகுதி விஜயம் தேர்தல் ஏமாற்று அரசியலே ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் வடபகுதி விஜயமும் மாபியாக்களின் உசார் நிலையும் தேர்தலை இலக்குவைத்து நகர்த்தப்பட்டது
  குடியரசுத் தலைவரிடம் இந்துக்கள் நேரில் வேண்டுகோள். இலங்கை தமிழரசு கட்சி தலைவர் திரு மாவை சேனாதிராஜா மாவட்டபுரம் அருள்மிகு கந்தசாமி கோயில் தலைவர் குருக்கள் ஐயா சிவ பூமி அறக்கட்டளை தலைவர் திரு. ஆறு திருமுருகன் சிவ சேனை தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் கூடுதலானோர் கையொப்பமிட்ட வேண்டுகோளை இலங்கை இந்து அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் திரு சிவபால தேசிகர் செயலாளர் திரு சிறீந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்...
  மாளிகைக்காடு நிருபர் எங்கள் அருகில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் நாங்கள் சந்திக்கும் இடங்களில் உள்ள மக்கள் எல்லோரும் கட்சிகளுக்கு அப்பால் கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்களை நேசிப்பதையும், ஆதரித்துப் பேசுவதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. மக்கள் வருங்காலத்தில் நமது சமூகத்தை முன் கொண்டு செல்ல கூடியவராகவும் எஸ்.எம். சபீஸ் அவர்களை பார்க்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும்,...
  200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமிருந்த மேற்படி சூழலை தொல்லியல் நிலமாக தொல்லியல் திணைக்களம் அடையாளபடுத்தி இருந்தது இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தொல்லியல் சட்டங்களையும் மீறி பௌத்த சாசன அமைச்சு மற்றும் இராணுவத்தினர்-கடற்படை உதவியுடன் புதிய பௌத்த மத கட்டுமானங்களை நிறுவி இருக்கின்றார்கள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைக்கு Kottiyarama Sri Pathra Dhathu Raja Maha Viharaya பெயரிட்டு இருக்கின்றார்கள் இது மாத்திரமின்றி விகாரை சூழலில் பிரமாண்ட புத்தர் சிலை...
  நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 06 தொடக்கம் 09 மாத (வயதுடைய) குழந்தைகளுக்காக மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது. காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஷீர் அவர்களின் தலைமையில் சின்னமுத்து...
  வவுனியாவிற்கு இன்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் இந்நிலையில் மாநகரசபை கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதி வருகை தந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன் போது...
  96 வயதான மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன் போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூதாட்டி கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயன்றவேளை கிணற்றினுள் விழுந்தது உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் உடற்கூற்று...