மறந்துபோன லாட்டரி சீட்டு ; 2 வருடங்களின் பின் பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
Thinappuyal News -0
ஜெர்மனியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளமையால் அப் பெண் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் கலந்த 2022 ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார். அதன் பிறகு அவர் லாட்டரி டிக்கெட் முடிவை பார்க்க மறந்துவிட்டார்.
91 லட்சம் பரிசு தொகை
இந்த நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு வீட்டை சுத்தம் செய்த போது அந்த...
எந்தவொரு சர்வதேச மாணவர்களும் இந்த மாதத்திலிருந்து அவர்களது குடும்பத்தினரை அழைத்துவர முடியாது என பிரிதானியா அறிவித்துள்ளமை மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியமர்வை கட்டுப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
குடும்பத்தினரை அழைத்துவர முடியாது
அந்தவகையில் சர்வதேச மாணவர்கள் நாட்டுக்கு வரும் போது அவர்களின் குடும்பத்தை அழைத்து வருவதை கட்டுப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
முதுகலை படிப்புகள் அல்லது அரச நிதியுதவியுடன் கூடிய படிப்புகளில் ஈடுபடுபவர்களை தவிர, எந்தவொரு சர்வதேச...
காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவவீரரின் குடும்பம் : இரகசிய நடவடிக்கை மூலம் மீட்பு
Thinappuyal News -
காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவவீரரின் குடும்பத்தவர்கள் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையொன்றின்மூலம் அமெரிக்காவின் இராணுவ வீரரின் தாயாரும் உறவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரியொருவர் அசோசியேட்டட் பிரசிடம் தெரிவித்துள்ளார்.
காசாவில் கடும் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் அமெரிக்கர் ஒருவரை மீட்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
44வயதான ஜஹ்ராஸ்கக் தனது...
கனடாவில் கடந்த 2023ம் ஆண்டு வாகன விற்பனையில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளது.
ஓராண்டு கால இடைவெளியில் வாகன விற்பனை 11.8 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
டெஸ்ரோசியர்ஸ் ஒட்டோமோடிவ் கன்சல்டன்ட்ஸ் என்னும் நிறுவனம் வாகன விற்பனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.கடந்த 1997ம் ஆண்டின் பின்னர் நாட்டில் கடந்த 2023ல் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கோவிட் காலத்தில் கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
குறிப்பாக 2023 டிசம்பர் மாதம் அனைத்து...
கனடிய பிரதமர் குடும்பம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொண்ட பயணத்திற்காக அரச பணத்தை செலவிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இது பற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமெய்க்காவிற்கு பயணம் செய்திருந்தனர்.
ஜமெய்க்காவில் தங்கியிருப்பதற்கான செலவு செய்யப்படவில்லை எனவும், பிரதமரின் நண்பர் ஒருவரது ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமரது குடும்பத்தினர் விடுமுறைக்காக ஜமெய்க்கா பயணம் செய்ய முன்னதாகவே செலவு விபரங்கள் குறித்து அரச ஒழுக்க...
சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்களின் விலை
இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2400 முதல் 2600 ரூபா வரையிலும், தலபத் மீன் 3200 முதல் 3400 ரூபா வரையிலும், சால மீன் 650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், அட்டவல்ல 1500 ரூபாவாகவும், லின்னோ 1000 ரூபாவாகவும், இறால் 1600 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்றையதினம்(03.01.2024) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக ஆர்வலர்கள் முறையாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.
பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த...
நான்கு நாள் பயணமாக செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
இதற்கமைய இன்று(04) யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
மாலை 7 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார்.
அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல்
இந்நிலையில், 5ஆம் திகதி காலையில்...
சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நாவற்குழி பகுதியில் நேற்று(03.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட 54 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார்...
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டுச்சம்பவத்தில் சிசிரீவி கமெரா, 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்டதை அவதானித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதற்கமைய இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.