நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இதனை மேற்கொள்வதாக உறுதியளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய பிரச்சினை கடந்த கால தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை அரசியல் காரணங்களுக்காக முறியடித்தன. இந்த நிலையில் நாட்டு மக்களுக்க இடையில் நம்பிக்கை இல்லாத வரை இலங்கை ஒரு...
  கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத மதங்கள் மேலும் தெரிவிக்கையில், “உயிரை மாய்த்துக் கொள்வது பாவ செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு...
  போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படும் 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கைது செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பூரண மேற்பார்வையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்படவுள்ள பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தென் மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல்கள் ஹரக்கட்டாவுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களும் அது தொடர்பான...
  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல் “இந்த முறை ஒரு புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடத்தைச் சேர்க்க,...
  கொழும்பின் புறநகர் பகுதியில் விஷம் அருந்தி மரணமடைந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் சொற்பொழிவுகளை கேட்டவர்கள் வீடுகளில் இருந்தால் மிகவும் அவதானமாக இருக்குமாறு இந்த நபர் பல நாடுகளில் சொற்பொழிவுகளை நடத்தியுள்ளதாகவும், இவரது சொற்பொழிவுகளை கேட்ட பலர் உயிரை மாய்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரை மாய்த்த சர்ச்சைக்குரிய நபர், தனது விரிவுரைகளில் தான் அமானுஷ்ய விஞ்ஞானம் படித்ததாக...
  யுக்திய என்னும் தேடுதல் நடவடிக்கைக்கு பெரும் எண்ணிக்கையிலான உளவுத்தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார். நாளாந்தம் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலான இரண்டாயிரம் உளவுத்தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான போதைப்பொருள் வர்த்தகர்கள் தாங்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் வசித்த பிரதேசங்களை விட்டு தப்பிச்சென்றுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் தேடுதல் வேட்டை எனினும், இந்த தேடுதல் வேட்டை நாடு...
  , 'யுக்திய' நீதி நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவர் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதன்போது, பாதாள உலக செயற்பாடுகளில் சிறுவர்கள் இணையவும், சிறுமிகள் விபச்சாரத்திற்கு செல்லவும் வழியேற்படுகின்றது என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை. போதைப்பொருள் விநியோகத்தின்...
  தனது தாயாரை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான பெண் அனுமதித்திருந்தார். இதன்போது அவர் எடுத்துவந்த உணவை தாயாருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகமான முறையில் நடந்து நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த பெண், தான் தாயாரை விடுதியில் நின்று கவனித்து வருவதாகவும் உணவு வழங்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாத குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை வெளியேற்றியதுடன் அருகில் இருந்த...
  (ஆசிய மட்டத்தில்) இந்தியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் பரிசுகளை வென்ற மலையகத்தின் பெருமைக்குரிய வீர, வீராங்கனைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் மலையகத்தின் உண்மையும் நேர்மையும் சமூக அக்கறையும் எப்படியானது என்பதை இந்த பெருமைக்குரிய வீர, வீராங்கனைகளுக்கு எதிர் வரும் நாட்களில் கிடைக்கும் அங்கீகாரத்தை வைத்து தீர்மானிக்கலாம் அது மட்டுமல்லாமல் பலரின் கேள்விக்கான பதிலும் கிடைக்கும் என்பதில் எந்தவித...
      "இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது." - என அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.     இன்று (03.01.2024) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும்...