டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தீப்பிடித்துள்ளது. குறித்த விமானம் இன்று (2) ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கிய போது கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. JAL 516 என்ற இந்த விமானம் ஹொகைடோவிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. விமானம் தீப்பிடித்து எரியும் காணொளியை NHK எனும் ஜப்பானிய அரச ஊடகம் வௌியிட்டுள்ளது. விமானத்தில் 367 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் உட்பட...
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் 2022 ஆம் வருடம் 2,505 பேர் டெங்கு...
  மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவடிச்சேனை, சேனையூர், வட்டவன், வாழைத்தோட்டம் கல்லடி, முத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கனமழை பெய்து வருவதினால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதினாலும், மாவிலாறு திறந்து விடப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலை தகவல் இந்நிலையில், வெருகல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட...
அன்பான வாசகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துகளைத் தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையத்தளம் தெரிவித்துக்கொள்கின்றது.
  கொழும்பு நகரின் 5 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுபிட்டி உள்ளிட்ட 5 காவல்நிலையங்களை உட்படுத்தி இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விசேட போக்குவரத்து திட்டம் பண்டிகை காலத்தில் கொழும்புக்கு வருகைத் தரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்தப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில்...
  சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. எனவே இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று (30) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால்...
  நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஹபரன மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60 வீதமாக குறைந்துள்ள நிலையில், செலவின அளவு 90 விதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக 22...
  இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், கல்னாவ கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய இரு மாணவர்களுடன் எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இந்த ஆசிரியர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றில் முன்னிலை கடந்த 27ஆம் திகதி அநுராதபுரம்...
  ஆசிரியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார். சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டு கொடுப்பனவுகள் ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கடும் நெருக்கடியில் ஆசிரியர்கள் இந்த கொடுப்பனவு வழங்கப்படாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க...