அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மினிவேன் மீது லாரி நேருக்கு நோ் மோதியதில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 இந்தியா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் நுழைந்த லாரி மீது மினிவேன் மோதியது. மினி வேனில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 7 போ் பயணித்தனா். அவா்களில் லோகேஷ்...
  கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒட்டாவாவில் அமைந்துள்ள ரியாடு ஆற்றில் இந்த இருவரும் மூழ்கி காணாமல் போயிருந்தனர். ஒரு சிறுவனின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன: ஏனைய சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டது.பதின்ம வயதுடைய சிலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளனர். சில சிறுவர்கள் குறித்த பனி நீரில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 16 மற்றும் 18 வயதான இரண்டு சிறுவர்கள்...
  கனடிய அரசாங்கம் சூடானிய மக்களுகு;கு வீசா வழங்கத் தீர்மானித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வீசா வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அதிகளவான சூடானியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த புதிய நடைமுறை குறித்து அறிவித்துள்ளார்.சூடானில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் சூடானிய பிரஜைகளுக்கு கனடிய வீசா வழங்கப்பட உள்ளது. கனடாவில நிரந்தர வதிவிடவுரிமை உடைவர்களது...
  கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், அதிபருக்கான...
  இஸ்ரேலில் மொசாட் உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்றையதினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதன்போது, "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட...
  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சதீஷ் குமார் இலட்சுமி நாராயண் கோவில் தலைவராக உள்ளார். இந்தநிலையில் சதீஷ் குமாரின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் இந்த கோவில் நிர்வாகியின் மகன் வீடு சேதடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து...
  ரஷ்யா துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 6 நகரங்கள் மீதும், மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு உக்ரைன் வரையிலான பிற பகுதிகள் மீது நேற்றைய தினம் (29-12-2023) மாலை முதல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா துருப்புக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளன. சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது ஏராளமானோர் காயமடைந்தனர் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலானவர்கள் இடிபாடுகளுக்கு...
  கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்திருந்தனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். டியாவிக் பிராந்தியத்தின் வைரச் சுரங்கமொன்றிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் எட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்து குறித்து...
  ரஸ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். மிகப்பெரிய வான்தாக்குதல் இது வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என போலந்தின் இராணுவதளபதி ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார். உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஸ்ய...
  பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது தலைவருக்கும் கட்சிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவோருக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேருபூசும் செயற்பாடுகள் கடந்த 25ஆம்...