விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அண்மையில் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் கொள்கை மாற்றுபவர்கள் இல்லை. எடுத்த முடிவில் எமது...
  கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் குறித்த முதியவரை மூங்கில் கம்பத்தால் தாக்கியுள்ளதாக அவரின் மனைவி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த முதியவர் வாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டிற்கு அழைத்துச் சென்ற முதியவர் அவரை பராமரிப்பதற்கு வைத்தியசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் 2500 ரூபா...
  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோப்ப நாயுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த திடீர் சுற்றிவளைப்பானது நேற்று (29.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீர் சோதனை நடவடிக்கை மேலும், மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர் பண்டார தலைமையிலான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று பகல் மத்தியஸ்தர் வீதியிலுள்ள பிரபல பெண் போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இதன் போது போதைப்பொருள்...
  பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலையை சேர்ந்த நபரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பணம்...
  2 பேருந்துகள் மற்றும் பௌசர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(29.12.2023) இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மாத்தறைக்கு செல்லும் வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பதினொன்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடுஅவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை மூன்று வாகனங்களையும் சாரதிகள் கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு...
  தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29.12.2023) வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்...
  தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச்...
  பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான கொத்மலை டெய்ரி புரொடக்ட்ஸ் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 170 மில்லி வெண்ணிலா பால் பொதியின் விலை திடீரென 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னர் இந்த பால் பாக்கட் ஒன்றின் விலை 80 ரூபாவாக இருந்தது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் VAT அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், பால் பொதி ஒன்றின் விலை திடீரென 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய நுகர்வோர் முன்னணி கேள்வி...
  பயணசீட்டு இன்றி தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிக்கின்றனர். அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாய் வருமானம் இல்லாமல் போகின்றது. அபராத தொகை இந்த நிலையில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும்...
  காலி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அறையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 40 முதல் 50 வயதுக்கும் வயதிற்குட்பட்ட நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இறந்து 3 நாட்களாகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ நீதவான் அழைக்கப்பட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக...