பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் போல் நடித்து, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவர்கள் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவர்கள் போல் நடித்து சமூக...
  செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்கு செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வசிப்பிடத்தல் உள்ள...
  கம்போடியா, மியன்மார், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் பல பாதாள உலகக்கும்பல் இயங்கி வருவதாகவும், கணினி குற்றங்களுக்கு அவர்களைப் பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களை சிறையில் அடைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருவதாகவும் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. இதன்படி, இந்த 04 நாடுகளில் பாதாள உலகக்கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி அவர்களின் உழைப்பு பலவந்தமாக சுரண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தடுத்து...
  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்(01.01.2024) நடைமுறைக்கு வரவுள்ள 18 வீத வற் வரி அதிகரிப்பின் காரணமாக அனைத்து பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. சுமார் 15 வீதத்தால் இவ்வாறு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு இதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருக்கும் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இதற்கு பின்னர் 35 ரூபாவாக அதிகரிக்கப்படும். 15 வீதமாக இருக்கும் வற் வரியை ஜனவரி முதல் 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம்...
  05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (30) பிற்பகல் வரை செல்லுபடியாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நில அதிர்வுகள் இதேவேளை, இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை...
  டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 2023 இல் பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 87,078 ஆக உயர்த்தியுள்ளது. இதன்படி, இந்த மாதத்தில் மாத்திரம் 10,600 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்து மண்டலங்கள் வருடத்தின் மொத்த தொற்றாளிகளான 87,078 டெங்கு நோயாளர்களில் 39,543 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். இதன்படி, கம்பஹா மாவட்டத்தில்...
  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். தொடர்ந்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை அதிகமாக இருப்பதால் விரைவாக...
  ரூ,8,499 முதல் ரூ,15,000 வரை பட்ஜெட் விலையில் 2023-ல் வெளியான Smartphone-களை பற்றி விரிவாக காணலாம். Realme முதல், iQOO நிறுவனம் வரை 2023-ல் பட்ஜெட் விலையில் வெளியான 5 Smartphone-களின் லிஸ்ட் இதோ. 1. Realme C53 Rear Camera- 108 Mega Pixel Ultra-Clear Camera Selfie Camera- 8 Mega Pixel Display - 6.74 inch (90Hz Refresh rate) Battery- 5,000 mAh Chipset - Unisoc T612 Octo-Core Storage -...
  டெஸ்லா நிறுவனத்தில் ரோபோ தாக்கியதில் பொறியாளர் காயமடைந்ததால் தகவல் டெக் பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒரு சம்பவம் தான் டெஸ்லா நிறுவனத்தில் நடந்துள்ளது. ஊழியரை தாக்கிய ரோபோ கடந்த 2021 -ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ ஒன்று பொறியாளரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார் என்ற...
  தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் சகாப்தம் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2024) பல புதிய மின்சார கார் மொடல்களைப் பார்க்கலாம். புத்தாண்டில் (2024) இந்தியாவில் வெளியிடப்படும் மின்சார வாகனங்களைப் பற்றி பேசினால், பெரும்பாலான வாகனங்களின் விலை ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும். இருப்பினும், சில வாகனங்கள் இந்த ஆண்டு ரூ.10 முதல் 12 லட்சம் வரை விற்பனை செய்யப்படலாம். Tata Motors தனது TATA Harrier EVயை இந்த ஆண்டு...