கனடாவின் லண்டன் பகுதியில் கடுமையான பனி மூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில இடங்களில் படிப்படியாக பனிமூட்டம் குறைந்த போதிலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் கடுமையான பனிமூட்டம் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. லண்டனின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாலை வேளையில் வெப்பநிலை 3 பாகை செல்சியஸாக குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
  பனிப்பொழிவு நிலவும் பகுதிகளில் பயணம் செய்வது அபாயகரமானது என அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பனிர் படர்ந்திருந்த நீர்நிலையொன்றில் வீழ்ந்து மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். நத்தார் பண்டிகைக்கு முன்னர் காணாமல் போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்காக மீட்கப்பட்டிருந்தனர். கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இவ்வாறு விபத்தில் சிக்கியிருந்தனர்.பனிப்பொழிவுடன் காணப்படும் நீர் நிலைகளில், வாகனங்களை செலுத்துவது அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 முதல் 20...
  பிளைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. அந்த காணொளியில் இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. அரைநிர்வாண ஆண்கள் அதேசிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என், ஏனையை ஆண்களும் கைகளை உயர்த்தியபடி காணப்படுவதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை...
  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன் தனது பெற்றோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உங்கள்...
  காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவானது நேற்று(28.12.2023) காலை திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்த நீர்மட்டம் இந்நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக...
  அசாதாரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இன்றைய தினம் (28.12.2023) டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிறியளவு நீர் தேங்கி உள்ள இடங்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் நிலை காணப்படுவதால் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது. நோயாளிகளை...
  போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இனைஞனை இன்று (28.12.2023) மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றினை இளைஞர் ஒருவர் வாடகைக்குப்பெற்று வசித்து வந்த நிலையில் அவரின் செயற்பாடுகளை அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகள் இந்நிலையில் குறித்த வீட்டினை இன்று மாலை இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்குவந்த மட்டக்களப்பு தலைமையக...
  திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று(28.12.2023) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறி்யுள்ளார். டெங்கு நோயின் தாக்கம் இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில்17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில்...
  நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட...
  சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இறைச்சிக் களஞ்சியத்தை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அதன் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். அனுமதியின்றிய இறக்குமதி இதற்கமைய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட...