சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறித்த செயற்கைக் கோள்கள் விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள ஏவப்பட்டன.இந்த செயற்கைக் கோள் லாங் மார்ச்-11 ராக்கெட் 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 58 மெட்ரிக் டன் எடையும் கொண்டது. இது குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய-ஒத்திசைவு சுற்றுப் பாதைக்கு செயற்கைக் கோள்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது. விண்ணில்...
  கனடாவில் முக்கிய அரசாங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் வைத்தியசாலைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. நகரசபைகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலை சபைகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான சைபர் தாக்குதல்கள் மூலம் பலரின் தகவல்களை கசியச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையாளர் பெற்ரிசியா கோசீம் இந்த எச்சரிக்கையை...
  அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் ஜாம்பி மான் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த தொற்றை 'மெதுவாக நகரும் பேரழிவு' என்றும் இது மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கா - கனடாவை அச்சுறுத்தும் ப்ரியான் புரதப்பொருளின் வளர்ச்சி ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த 'ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும்...
  வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதோடு தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
  கண் அறுவை சிகிச்சையின் போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய வைத்தியரை பணியிடை நீக்கம் செய்ய குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த 2019 அம் ஆண்டு சீனாவின் குய்காங்'ல் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பதிவாகி 3 ஆண்டுகளுக்கு பின்னர், வைத்தியசாலையில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகிய காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதையடுத்து, குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய வைத்தியர் பணியிடை நீக்கம்...
  கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை லட்சம் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களுடன் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியலில், அரசாங்கத்திற்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்களை...
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரில் பொருட்கள் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சவானா நிக்கோல் சோடோ எனும் 18 வயதுடைய பெண்ணும் இசைக்கலைஞரான 22 வயதுடைய மேத்யூ குரேரா எனும் ஆணும் காதலித்து வந்த நிலையில் தனி வீடொன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வப்போது தனது தாயுடன் சவானா போனில் பேசி வந்துள்ளார். இந்தநிலையில் சவானா தனது காதலன் மேத்யூவுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான...
  உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவிலும் மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுமார் ஐந்து மில்லியன் கனடியர்கள் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ரெஜினாவில் அமைந்துள்ள செகன்ட்ஸ்ட்ரீட் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் சத்திர சிகிச்சைகளை செய்து கொள்வதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் விசேட நிபுணத்துவ மருத்துவர்களின்...
  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் மூன்றாவது டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். முன்னதாக, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத குழந்தையும், யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய யுவதியும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர். டெங்கு நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டும் 136 டெங்கு நோயாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில்...
  2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 771 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...