முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வரும் நிலையிலேயே அமைச்சர் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொவிட் பரவும் அபாயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் மீண்டும் கொவிட் - 19 தொற்று...
பெரிய கடை வீதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இத் தீ விபத்து சம்பவம் நேற்று (27.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தீயணைப்பு பிரிவினரின் நடவடிக்கை
தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார்
மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார்.
அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம்...
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதம்பாதிக்கப்பட்டுள்ளன.
வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெள்ளத்திற்கு முதல் மடிச்சு கட்டி மற்றும் கபிலநிற தத்தி போன்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் , அவற்றிலிருந்து காப்பாற்றி வயல்நிலங்களை பராமரித்து வந்துள்ளனர்.
இழப்பீடு
இந்நிலையில் வெள்ளத்தினால் தற்போது அவை...
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற மாமா என்ற பெயருடைய கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தங்கியுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு அழகான யுவதிகளையும் மேலும் நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள்கள் மற்றும் அவற்றைக் குடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யுவதிகள் கைது
இதன்படி அழகான யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக...
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
உண்மை வெளியாகவில்லை
இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காகவடிவமைப்படும் இரதம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
புலிகளின் தலைவருடைய படம் மற்றும் சின்னம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினரால் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்படி இளைஞருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த கொடிகாமம் பொலிஸார், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில்...
நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்டிவங்களை பெற நாடு முழுவதும் அரச வங்கிகளுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட விடுமுறை காரணமாக கடந்த வார இறுதியில் மூடப்பட்ட அரச வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, அந்த வங்கிகளின் முன் வரிசைகள் உருவாகியுள்ளன.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக சமூர்த்தி மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற வங்கிகளுக்கு அருகில் இவ்வாறு நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் விண்ணப்பம் கோரல்
இதேவேளை,...
அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண ஏரிக்கு அருகில் உள்ள கல் குகையில் நேற்று (27) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை தெரியவரவில்லை எனவும், 45-50 வயதுடைய 5 அடி 5 அங்குல உயரமுள்ள ஆண் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேலும் அவர் ஊதா நிற சட்டையும், ஊதா கலந்த காற்சட்டை அணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இதேவேளை,...
இலங்கையில் கடந்தவாரம் மிக உன்னதமான நடவடிக்கையொன்று பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது நாட்டின் கல்விச் சமூகத்தையும் இளம் சமுதாயத்தையும் போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக ஓர் அதிரடிச் சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. இதற்கு 'யுக்திய' நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இச் சுற்றிவளைப்புகளில் பல மில்லியன் கணக்கான சகல வகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதுடன் பல இலட்சம் பெறுமதியான வீடுகள் மற்றும்...