பிகாரில் ஒப்பந்த அடிப்படையில் அரச பாடசாலைகளில் பணியாற்றி வந்த 3.5 லட்சம் ஆசிரியா்கள் நிரந்தர அரசுப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிகாா் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ். சித்தாா்த் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 3.5 லட்சம் ஆசிரியா்களை நிரந்தர அரசுப் பணியாளா்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இப்போதைய...
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 ஆம் திகதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை கூறியதாவது:
காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 போ் உயிரிழந்தனா். 382 போ் காயமடைந்தனா்.
இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
09 மாதங்கள் முதல் 10 வயது...
உலக வரலாற்றில் ஒரு இருண்ட நினைவை சேர்க்கும் வகையில், இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்ட சுனாமி அனர்த்தம் இடம்பெற்று (26) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த இந்நாட்டு மக்களுக்காக நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலின் அடிப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 9...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதோடு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில்...
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வளாகங்களையும் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்தார்.
"தற்போது தினசரி டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மழைப்பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. நுளம்பு...
வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும். -...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடையில்லாச் சான்று (என்ஓசி) வழங்காது எனத் தெரிவதால், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தேசிய அணிக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலக அவர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்கான பிரத்யேக குழு ஒன்றை ஆப்கானிஸ்தான் வாரியம் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக...
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு அந்த நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த 25ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர் “யுக்திய” நடவடிக்கை மூலம்...
ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜப்பானிய நிதியமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.