பாறுக் ஷிஹான்
களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் 2 பசளைகள் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் செவ்வாய்க்கிழமை (26) இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழு புலன்விசாரணைகளை...
ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இலங்கையை சுனாமி ஆட்கொண்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்த நிலையிலேயே இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டது
இந்த நிகழ்வின்போது, சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் இலங்கை தேசியக் கொடியை மருதங்கேணி காவல்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தத்தால் காவு கொள்ளப்பட்டவர்கள் நினைவாக முல்லைத்தீவில் சுனாமி நினைவேந்தல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மத வழிபாடுகள்
காலை 8 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்துமத வழிபாடுகளை முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகர் கிருசாந் நிகழ்த்தினார்.
இஸ்லாமிய மத வழிபாடுகளை முல்லைத்தீவு ஜும்மா பள்ளிவாசல் மௌளவி ஜஸ்மின் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மத வழிபாடுகளை...
கனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்த சில மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.வீட்டுக்குள் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவில் போட்டியிட சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். சவீரா பர்காஷ் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மருத்துவராக...
அவுஸ்திரேலியாவில் கொட்டித்தீர்த்த மழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்பட தயாராக இருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைநகரான சிட்னியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சிட்னி விமான நிலையத்திற்குள் நீர் புகுந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் சிட்னி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனையடுத்து...
முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, மக்கள் நேற்று (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள...
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே சயிதா சைனப் என்ற பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை முக்கிய தளபதி ராசி மவுசவி (general Seyed Razi Mousavi) கொல்லப்பட்டதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது.
மத்திய...
கனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான்.
சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம்...
பிரான்ஸ் பாரீஸில் தாய் மற்றும் குழந்தைகளின் 5 சடலங்கள் மீட்பு; கிறிஸ்துமஸ் தினதில் பயங்கரம்
Thinappuyal News -
பிரான்ஸில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இருந்து 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் இருந்து 41 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘Meaux‘ நகரிலேயே இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 9 மணியளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன உயிரிழந்தவர்கள் ஒரு பெண் மற்றும் அவரது நான்கு சிறு குழந்தைகள் என்றும் பிரான்ஸ் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
"தப்பி ஓடிய" 33 வயது தந்தையை போலீசார் தேடி வருவதாக...