பொலிஸாரின் அடக்குமுறையை விமர்சிக்கும் சில மதத் தலைவர்கள் : டிரான் அலஸ் குற்றச்சாட்டு
Thinappuyal News -0
குற்றக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருக்கும் சில மதத் தலைவர்கள் கூட குற்றவாளிகள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை விமர்சிக்கும் வகையில் செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அத்துடன் பொலிஸாரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அரசியல்வாதிகளும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இது பொலிஸாரின் நடவடிக்கையை திசை திருப்புவதற்காகவே உள்ளது.
அத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பு...
கட்டுகுருந்த கடற்கரையில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த தெஷாஞ்சன தரிந்த(22 வயது) என்ற கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கியபோது, அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் உதவி கேட்டு சத்தமிட்ட போது சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இருந்த போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது...
இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக சுமார் எண்ணாயிரம் ஏக்கர் வரையான நெற்பயிர்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வெரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய் வரைவான இழப்பினை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூலம் மேலதிக நீர் திறந்து விடப்பட்டு அதிக அளவான நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மதுபான விருந்து
நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு தனது நண்பர்கள் சிலருடன் மதுபான விருந்து ஒன்றில்...
யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.
குறித்த விபத்து சம்பவம் நாயாத்துவழி பகுதியில் நேற்று திங்கள் (25) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதிவேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.
சாரதியின் கவனயீனம்
குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த...
தாவடியைச் சேர்ந்த ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது.
மதுரன் கிருத்திஸ் என்ற பதினொரு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் தெரியவருகையில்,
பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குற்றவாளி! வெளியான ரகசியங்களால் ஆட்டங்காணும் அரசியல்
தென்னிலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குற்றவாளி! வெளியான ரகசியங்களால் ஆட்டங்காணும் அரசியல்
மேலதிக விசாரணை
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவரொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின்...
தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் சகோதரி குற்றச்சாட்டியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின்...
சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (23.12.2023) மேலும் 8 கைதிகளுக்கு மூளைக்காய்ச்சால் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இக்கருத்தைவெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளால் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 கைதிகள் அதே நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
சிறைச்சாலைகளின் சுகாதார...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்சென்றுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த வாக்குமூல பதிவுவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கைது நடவடிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை...