ஈஸ்டர்குண்டுத்தாக்குதல் கிழக்கில் இடம்பெற்ற கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற தாக்குதலின் சூத்திரதாரி பிள்ளையான் சனல் 4 வெளியிட்ட ஆவணம் விசாரிக்கப்படவேண்டும் அவரை காப்பாற்ற நாம் ஏன் முயற்சிக்கவேண்டும் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சிறப்பு நேர்காணல்
நூருல் ஹுதா உமர் உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 19 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி...
நூருல் ஹுதா உமர்  எதிர்வரும் 30.12.2023, 31.12.2023 திகதிகளில் மருதமுனை சைக்கிளிங்க கிறீன் கழகத்தினால் பசுமையாக்கம், விதைப்பந்தாக்கம், மிதிவண்டிப் பாவனையை அதிகரித்தல், நஞ்சற்ற உணவை, காலநிலை மாற்றம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மையமாகக் கொண்டு பிரமாண்டமானமளவில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் ”பொலநறுவை சைக்கிளோட்டம்” சம்பந்தமான ஊடக மாநாடும், புதிய மேலங்கி அறிமுகமும் திங்கட் கிழமை இரவு மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த ஊடக மாநாட்டில் ''பொலநறுவை சைக்கிளோட்டம்” சம்பந்தமாக எம்.எப்.ஹிபத்துல் கரீம்...
பாறுக் ஷிஹான் சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட  உறவுகள் உணர்வு பூர்வமாக  அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால்  கடைப்பிடிக்கப்பட்டது. இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு  நினைவாலம், காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற...
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், திருப்தி யோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், கிறிஸ்து பிறப்பு விழா என்பது இறை மகன் இயேசு இவ் உலகில் மனிதனாக கன்னிமரியாவுக்கு பிறந்த அந்த...
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை (26) தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள...
இந்தியாவின் தமிழ்நாட்டில் இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் நெருங்கிய போது கொட்டிய கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவதாகவும், திமுக எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் நிதியுதவி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் அதன்படி, மழை வெள்ள பாதிப்புகளுக்கு அரசுக்கு உதவும் வகையில் அமைச்சர்களின் ஒரு மாத சம்பளமான...
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம்...
மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த...
அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் டிசம்பர் 23 ஆம் திகதி அன்று, சுமார் 40% அதிகரித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி 140,791 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்ததாகவும் இதன் மூலம் சுமார் 46,457,600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 23ஆம் திகதி சுமார் 145,503 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் அதன் ஊடான வருமானம் சுமார் 50,174,550 ரூபாவாகும். கடந்த 23ஆம் திகதி பெறப்பட்ட வருமானமே இதுவரை நெடுஞ்சாலைகளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் எனவும், இது ஒரு...