ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்று
இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையை லங்காசிறி செய்திப் பிரிவினர் தொடர்பு கொண்ட போது வைத்தியசாலை தரப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாகவும், எனினும் கோவிட் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்...
வவுனியா பகுதியில் தாய் மற்றும் இரட்டை மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும், இந்த மோசடியில் முக்கிய கடத்தல்காரரான இவர்களின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 மணி நேரமும்...
250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலப்பகுதியில் தரகு பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பதிலாக அத்தியாவசியமற்ற பல மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமையே...
அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஆண்டுக்கு 42 ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்
இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை...
கொம்பனித்தெரு, வேகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்தியசோதனையின் போது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடந்த 21 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.இந்த நிலையில் அரசாங்க அதிபர் இன்று (23) தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்...
மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்த நபர் கொலை குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பெயரில் 30.08.2023 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நோயைக் கட்டுப்படுத்த...
ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டி உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானரா அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...
பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன் தினம் (21) மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநோசி, முல்லைத்தீவு பகுதி மக்கள்...
ஐபிஎல் தொகை மூலம் எனது மகள்கள் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வார்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை அணியில் மிட்செல்
: உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல்-லின் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது.
இதில் 10 அணிகளை சேர்ந்த நிர்வாக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து ஆல்-ரவுண்டர்...