உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.கடந்த மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட அதிகூடிய விலை உயர்வாக இது கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் உள்ள பராக்கில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மர்ம நபரொருவர் சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்ட்டில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்றைய தினம் (21-12-2023) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மக்கள் ஏனைய மாகாணங்கள் நோக்கி குடிப்பெயர்தல் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான பிரிட்டிஷ் கொலம்பிய வாழ் மக்கள், ஏனைய மாகாணங்களில் குடியேறியுள்ளனர்.கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து காலாண்டு பகுதியாக இவ்வாறு உள்ளக குடிப்பெயர்வு பதிவாகியுள்ளது.மாகாணத்தை விட்டு வெளியேறி நகர சனத் தொகை எண்ணிக்கை 4634 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2023ம் ஆண்டின்...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இரு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக...
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த குடும்பத்தினர் பரிசு வென்றுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த குடும்பத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. நான்சி காவுத்தியர் குடும்பத்தினர் இவ்வாறு பெருந்தொகை ஜாக்பொட் பரிசினை வென்றுள்ளனர்.
வீடு ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நான்சி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக கியூபெக் மாகாண மக்கள்...
பெல்ஜியத்தின் Odenard இல் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 63 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். பெண் மீது விழுந்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ளது என்று கூறப்படுகிறது.
கண்டிபிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஓஷத பந்துல பண்டார அலஹகோன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று(21)...
ஆனைவிழுந்தான் குளத்தின் அணைக்கட்டு சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் குறித்து அணைக்கட்டின் சில இடங்களில் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக வான் பாய்ந்து வருகின்றது.
இந்த நிலையில், குளத்தினுடைய அணைக்கட்டு நீண்ட காலம் புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் அணைக்கட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.
மேலதிகமாக நீர் வரத்து
அத்துடன் குறித்த அணைக்கட்டின் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு குளத்து நீர் வெளியேறி...
பருத்தித்துறை பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசேட சோதனை
இந்நிலையில் பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் இன்று (22.12.2023) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நாளை (23.12.2023) சனிக்கிழமை காலை 10 மணியளவில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குரலற்றவர்களின் குரல்
"ஒரு மனிதநேய சிவில் செயற்பாட்டு அமைப்பு என்ற வகையில் 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினராகிய நாம், எமது சக மனிதநேயப் பற்றாளர்களான மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் தரப்பினர்களினதும் மனமிசைந்த ஒத்துழைப்புடன், 28...