கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. ஆராச்சிக்கட்டுவ - அனவிலுந்தவ, ஜயரத்ன புர பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீயினால் முழுமையாக சேதமடைந்துள்ளது. குடும்பத் தகராறு குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் கணவன் வீட்டுக்குத் தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். . தீயினால் வீடு மற்றும் தளபாடங்கள் சேதம் அடைந்துள்ள போதிலும் உயிர்...
  விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராக விளக்கமறியல் உத்தரவு பெறப்பட்டுள்ளது என மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த...
  கோவிட் புதிய திரிபினை கண்டறிவதற்கு தேவையான போதிய வசதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் ஜே.என்.1 இலங்கைக்குள் பரவியிருக்கலாம் என சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். எனினும் இது தொடர்பிலான பரிசோதனைகளை நடாத்தக் கூடிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவில்லை என சுகாதார பணியாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. புதிய கோவிட் திரிபு கோவிட் பரிசோதனை நடத்தக்கூடிய ரெபிட் என்டிஜன் உபகரணங்கள் மருத்துவ விநியோகப் பிரிவின் கையிருப்பில் உள்ள போதிலும்,...
  யுக்திய நடவடிக்கையின் ஊடாக 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் யுக்திய என்னும் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின் ஊடாக 2938.73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வாகனங்கள் கைப்பற்றல் இந்த நடவடிக்கையின் மூலம் 1427 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,...
  எதிர்வரும் வாரத்தில் தொடர் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் அறிவித்துள்ளார். பராமரிப்பு நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்த சர்வதேச அளவுகோல்களுடன் மின்சார சபை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. மின்சார விநியோகம் மின்சார விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மீளாய்வு செய்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வார இறுதி...
  நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில்பண்டிகை காலங்களில் விருந்துகளுக்கு செல்பவர்கள் சாரதியை அழைத்துச் செல்லுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல அறிவுறுத்தியுள்ளார்.அவ்வாறு சாரதி இல்லாத பட்சத்தில் வாடகை வாகனத்தில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 21312 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துகளில் 2163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5296 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும்...
  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிதான் இந்த நாட்டை வங்குரோத்து அடைய வைத்தது. அந்தத் தரப்புடன்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கின்றார். இவ்வாறு நாட்டை வங்குரோத்து அடைய வைத்தவர்களால் நாட்டை மீட்க முடியுமா? முடியாது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பதற்குச் சாத்தியமே இல்லை.என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.புதியதொரு அரசே எமது...
  கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார். தனது 'எக்ஸ்' கணக்கில் குறிப்பொன்றினை பதிவிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், JN.1 கோவிட் விகாரம் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
  16000mg கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!! வவுனியாவில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16000mg கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நாடளாவியரீதியில் பொலிசாரினால் விசேட போதை ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய வவுனியாவிலும் குறித்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில் அந்தவகையில் நேற்றயதினம் இரவு வவுனியா...
  10 அமைச்சுக்கான செயலாளர்களும் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (22) காலை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க, வனஜீவராசிகள் மற்றும்...