அமெரிக்காவில், 2020-ஆம் ஆண்டு, காவலர் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தது இனவெறிக்கு எதிராக பெரியளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் ஒஹையோ மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பிராங்க் டைசன் என்ற கருப்பினத்தவர் கடந்த 18 ஆம் திகதி , காரை ஓட்டிச் சென்றபோது மின் கம்பம் மீது மோதியதால், காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட...
  கலிபோர்னியாவில் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர்களது...
  இங்கிலாந்து மன்னர் புற்றுநோயால் பாதிகப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கலவைக்கிடமாக உள்ளதாகவும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் இப்போதே அரண்மனை நிர்வாகம் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடிய நிலையில் எதிர்பாரா வகையில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார். மன்னரின் இறுதிச்சடங்கு மன்னரின் புற்று நோய் பாதிப்பு வெளியுலகுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளபோதும் , அது எம்மாதிரியான பாதிப்பு...
  விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe) அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (Sri Lanka Podujana Peramuna) மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. விஜயதாச ராஜபக்ச எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் கோரிக்கை இந்நிலையில் விஜயதாசவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க...
  குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது வீதியில் முகத்தை துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து...
  வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று (26.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது. வெலிகந்த, ஜயவிக்ரமகம மஹாவலி சிங்கபுர பகுதியினை சேர்ந்த ஜயநாத் பண்டார என்ற 2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அன்னையர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தாய் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்த போது இந்த அனர்த்தம்...
  மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை சேகரித்து எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பேரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார். இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி, வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயு உற்பத்தி எரிவாயு உற்பத்திக்குப் பிறகு, திரவ உரம்...
  உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருள் இறக்குமதி எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும்...
  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் மோசடி இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  பொருளாதாரம் ஸ்திரமடைந்து விட்டதாகவும், பொருளாதாரத்தில் தற்போது வளர்ச்சி உருவாகி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி 2022இல் 360 ரூபாவாக இருந்த நிலையில், இன்று அது 300 ரூபாயாக குறைவடைந்துள்ளமையை வளர்ச்சிக்கு உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் அத்துடன், இலங்கையில் மாற்று விகிதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். ரூபாவின் பெறுமதி இது, அந்நிய செலாவணி சந்தையில் வழங்கல் மற்றும் தேவை இயக்கவியலுக்கு ஏற்ப நாணய...