காஸாவை முன்னிட்டு தொடர்ச்சியாக மேல்மட்டளவிலான பேச்சுவார்த்தை அமெரிக்கா, கூட்டணி நாடுகள் மற்றும் அரபு தேசத்தின் அதிகாரிகள் இடையே நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட, தடையின்றிய வாழ்வாதார உதவிகளை காஸாவில் அளிக்கும் தீர்மானத்தில் அமெரிக்கா வாக்களிக்க தாமதித்து வருகிறது. முந்தைய போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது. இம்முறை, தீர்மான உரையில் குறிப்பிடப்பட்ட போர் நிறுத்தம் மற்றும் காஸாவுக்குள் வாழ்வாதார பொருட்கள்...
  செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல்...
  சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. அவர்கள் தற்போது மியான்மாரின் சைபர் கிரைம் பகுதியான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு, இணைய அடிமைகளாக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்நாட்டு அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரின் முயற்சியில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல்...
  சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்துள்ளனர். ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 13 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன. சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் ஏற்பட்டு வந்தது. எனினும், சோங்கிங் பகுதியில் கடந்த 2020-ஆண்டு ஏற்பட்ட 2 சுரங்க விபத்துகளில் 39 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து...
  அமெரிக்காவில் 48 வருட சிறைவாசத்தின் பின் நபர் ஒருவர் நிரபராதி விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama). 1975 காலகட்டத்தில் இம்மாநில தலைநகரமான ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர். அவர் இழந்த வருடங்களை யார் தருவார்கள்? இந்த வழக்கில்...
  கனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர். கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அங்கு...
  பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் அகதிகள் தரைவழியாகவும், கடல வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைந்து வருகின்றனர். சமீப வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்தன. கட்டுக்கடங்காமல் அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் விவாதித்து வந்தனர். இந்நிலையில்,...
  பொட்டுஅம்மான் உயிருடன் இருக்கிறார் இலங்கை இராணுவப்புலனாய்வு அதிரடி தகவல் புளொட் அமைப்பின் நிதிப்பொறுப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை யின் விவசாய அமைச்சருமாகிய கந்தையா சிவநேசன் இராணுவப்புலாய்விற்கு தெரிவிப்பு
  மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23ஆவது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில், மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பொது மன்னிப்பில் விடுதலை மேற்படி நிகழ்வில் சமூகசேவகர் அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். கடந்த 20.12.2000 அன்று...
  நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பாடசாலையின் முன்பாக விழுந்து பாடசாலையை பக்தியுடன் வணங்கியுள்ள செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னரே இவ்வாறு பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர். குறித்த மாணவர்களின் செயலானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.