கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது. புத்தளம் - மதுரங்குளி, தொடுவா பகுதியில் இன்று நண்பகல் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் குறித்த புள்ளிச்சுறா சிக்குண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சுறா இதன்போது குறித்த புள்ளிச் சுறா மீனை கடற்றொழிலாளர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன் மீண்டும் கடலில் விடுவித்ததாக கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு கரையொதுங்கிய சுறா மீன் சுமார் 30...
  உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சினை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது. இந்த உருளைக்கிழங்கு உண்மையிலே அவுஸ்திரேலியாவில் இருந்துதான் வந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நவீனமயமாக்கல் செயல்திட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தினுடைய தலைவர் செ.துஷ்யந்தன் தெரிவித்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாக்டீரியா தாக்கம் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே விவசாயத் தொற்று ஏற்பட்டிருப்பதாக எமது கிளிநொச்சி...
  வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு முற்றிய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த முதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் நால்வரும் மற்றைய தரப்பில் மூவருமாக 07...
  வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 974 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில்...
  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செபஸ்டியன் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின் கம்பிகள் இந்த மரணம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் வீட்டின் ஜன்னல்களில் மெல்லிய மின் கம்பிகள் இணைத்திருந்தமை தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணை குறித்த மின் கம்பிகளால்...
  பூநகரி, நெடுங்குளம் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி, பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் (21-12-2023) நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைந்து பெப்ரவரி முதலாம் திகதி கல்வி ஆரம்பிக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ள உயர்தரப் பரீட்சை காரணமாகவே நீண்ட பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாடசாலை விடுமுறை தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நீண்ட பாடசாலை விடுமுறை அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல்...
  பொரளை மயானத்தின் கல்லறைகளிலுள்ளவர்களின் அடையாள அட்டை இலக்கங்களுக்கும் வரி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். போலி வரி இலக்கங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கச்சாவடி மூலம் விடுவிக்கப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு ஒரு பொருளை இறக்குமதி செய்யும் போது சுங்கத்திலிருந்து நீக்குவதற்கு வரி இலக்கம் தேவைப்படுகின்றது. வரி மோசடி அதற்கமைய, அவ்வாறு கிடைக்கும் அந்த வரி இலக்கங்கள் போலியானவை என தகவல் கிடைத்துள்ளதாகவும்,...
  VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி (Pick me) மற்றும் ஊபர் (Uber) போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது. கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்...
  சதொசவில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு குறைந்த விலையில் சீனி வழங்குவதாக கூறி சுமார் இரண்டு வாரங்களாக ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. சீனி விற்பனையில் மோசடி இந்நிலையில், சாதாரண சந்தையில்...