பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்குவதற்கு பசில் ராஜபக்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருட மாநாடு மற்றும் நிறைவேற்று சபையில் நாமல் ராஜபக்ச அந்த பதவிக்கு முன்மொழியப்படவிருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக அந்த பிரேரணை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லவுள்ள நிலையில், கட்சியின் நிறைவேற்று சபை நீண்ட நாட்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
  மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களின் மறுசீரமைப்பின் போது அவர் இந்த குழுக்களின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் இரண்டு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதிநிதி என்ற நிலையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகம் மத்தியில் கட்சியின் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் செயற்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பேரவைக்கு...
  புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த நாடாளுமன்றத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனூடாக மாகாண சபைகளைப் பலப்படுத்துவது குறித்தும் ஆராய்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார். சாணக்கியன் தகவல் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு...
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வருடத்திற்கான முதல் தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்படவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றி கொள்ளவும் முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சங்கத்தின் 19 ஆவது பொதுச் சபைக்...
அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும். அஸ்வெசும பயனாளி குடும்பங்களில், 303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழ்மையான குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும்...
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா முரண்பட்டுள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம்...
நோர்வே நாட்டில் ஓஸ்பெர்க் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வைகிங் இன மக்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை ஸ்வீடன், நார்வே, பின்லாந்து மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளில் வாழ்ந்து வந்த வைகிங்குகளின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டிருப்பது வரலாற்றாய்வாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட வைகிங் கப்பல் நார்வேயில் உள்ள ஓஸ்பெர்க் பண்ணையில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது,...
அடுத்த வருடம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன் என குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள   இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அதோடு...
ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங் ஐ வெற்றிகரமாக ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்த பிறகு இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர். 19 ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இல்லாதது தெரிய வந்துள்ளது. அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி...