இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் வடக்கு காசா சீர்குலைந்துள்ளது. பழைய நிலைக்கு வர அது நீண்ட காலம் எடுக்கும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு...
உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப் பொருட்களை குறைவான விலையில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த நற்பெயருக்கு களங்கள் ஏற்படும் வகையில், விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி...
இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில் சுமார் 22,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 21,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்குகள் மூலம்  நீதிமன்றங்கள் ஊடாக இருபத்தி ஆறு கோடியே எழுபத்தாறு லட்சத்து முப்பதாயிரத்து நானூற்று நாற்பத்து எட்டு ரூபாயை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பொருட்களை...
இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி ​சேவை இன்று (20) தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசின் முயற்சிகளே வெங்காய ஏற்றுமதி தடைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகிய பிறகு சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள்...
பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்  ஈடுபட்டிருந்தனர். சீருடை மற்றும் சிவில் உடையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ்...
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், குறித்த மீனவர்கள்...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 209 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 228...
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட...
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும், பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என...