அமெரிக்க மக்கள் தங்களின் 47வது அதிபரை 2024ல் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நம்பகமானதாகக் கருதப்படும் Manmouth பல்கலைக்கழகத்தின் சர்வே முடிவுகள் திங்கள்கிழமை வெளிவந்தபோது பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஒப்புதல் மதிப்பீட்டின் (approval rating) அடிப்படையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை விட 1% வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
மறுப்பு மதிப்பீட்டில் (disapprove...
HV.1 எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு அமெரிக்க மாநிலங்களில் பரவி வருகிறது. இது மிகவும் தொற்றக்கூடிய ஓமிக்ரான் துணை வகையாகும்.
இது கோடையின் பிற்பகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின்படி இது அக்டோபரில் EG.5 உள்ளிட்ட பிற கோவிட் வகைகளை விரைவாக முந்தியது.
டிசம்பரில், இது அமெரிக்க குடிமக்களிடையே புதிய COVID-19 நோய்த்தொற்றுகளில் 30 சதவீதம் ஆகும். நவம்பர் 2021 இல் அமெரிக்காவில் ஓமிக்ரான் பரவத்...
கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது.
தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோரின் வருகையின் காரணமாக சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளது.சுமார் 66 ஆண்டுகளின் பின்னர் ஒரு காலாண்டில் கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி இந்த ஆண்டின், மூன்றாம் காலாண்டில்...
கனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
யூத சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.உலகின் ஏனைய பகுதிகளில் போன்றே...
அவுஸ்திரேலிய கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான ஜூட் விஜேசிங்க திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பூட்டான் பெண் பலி
இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் அவை அவராலேயே...
டிரம்ப் இல்லை என்றால் நானும் விலகுவேன்; அதிரடி அறிவிப்பை விடுத்த விவேக் ராமசாமி !
Thinappuyal News -
அடுத்த வருடம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன் என குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அதோடு...
இம்யூனோகுளோபுலின் ஊசியை செலுத்திய சம்பவம் தொடர்பில் இன்னும் ஏன் முன்னாள் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமைச்சரின் ஒப்புதல் மற்றும் ஆலோசனையின் கீழ் மருந்துகளின் கொள்வனவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் சிலர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் ஒப்புதல் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிருப்தியை...
கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி - பாலக்குடா, கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த 37 வயதுடைய தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா எனும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
தலவில பகுதியில் இருந்து நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பலத்த காயத்துக்குள்ளான...
வடமராட்சி, துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த பெண் நேற்று (19.12.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஹெரோயின்
51வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை இன்று(20) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (18.12.2023) கொழும்பில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின்போதே நீதிபதி இளஞ்செழியன் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தலைமை பதவியில் முதலாவது தமிழர்
இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தற்சமயம் இரண்டாவது தடவையாக 2024 ஆம் ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதலாவது தமிழர்...