டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் இவ்வாறு மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
  2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. 17 ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான துபாயில் நேற்று (19.12.2023) நடந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 214 பேர் இந்தியர்களும் 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ்...
பாறுக் ஷிஹான்   நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின்  சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா  சவளக்கடை றோயல் காடன் பகுதியிலுள்ள  மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல் நினைவரங்கில்   நடைபெற்றது. இதன் போது 2023 ஆண்டு தரம் 5  புலமைப் பரீட்சையில்  வெட்டு புள்ளிக்கு மேல் பெற்ற 12 மாணவர்கள்  , கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சி.எம் ஹலீம்  தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற...
  இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு அரச பேருந்து உத்தியோகஸ்தர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை சாரதி ஒருவர் நேற்று(18) இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே அவர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து தடை இதன்காரணமாக மட்டக்களப்பு சாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து பகுதிக்குமான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை அம்பிளாந்துறை நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி...
  கொவிட்-19 வைரஸின் வேகமாகப் பரவும் மாறுபாடான JN.1 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் நாட்டில் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பதிவாகியதையடுத்து, இந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஓமிக்ரோன் JN.1 கொவிட் வைரஸின் புதிய துணை வகையாக அடையாளம் கண்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் கேரளாவில் ஒரு பெண்ணிடம் பதிவாகியுள்ளது. இலங்கைக்கு அச்சுறுத்தல் வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய...
  ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின் கட்டண குறைப்பு மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடனான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
  இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற வர்ணங்கள் வழங்கல் மற்றும் விடுகை அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுவரையில் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக செயற்பட்டு வருகின்றோம். அதனை நாட்டின் பாதுகாப்பு...
  அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இது குறித்து, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில்...
  தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான வழக்குகளுக்கு முன்னிலையாவதன் மூலம் குறித்த சட்டத்தரணிகள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். 2,121 நபர்கள் கைது காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2 ஆயிரத்து 121 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில்...
  பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த யாத்ரீகர்களின் பாகிஸ்தானுக்கான விஜயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் விளக்கினார். இலங்கையர்களுக்கு பௌத்த யாத்திரை தலங்களை திறக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். நன்றி தெரிவித்த பிரதமர் இதேவேளை...