சீனாவின் வடமேற்கு பகுதியில் பூகம்பம் தாக்கியதில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுபோலில் 5.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் கன்சு மற்றும் அதன் அண்ட மாகாணமாக கிங்காய் ஆகிய மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சில கிராமங்களிற்கான மின்விநியோகமும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபு அலா  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிரேஷ்ட ஊடகர் காதரின் மறைவு ஆழ்ந்த கவலையளிக்கிறது; முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸின் அனுதாபச் செய்தி அபு அலா  சகோதரர் காதர் அவர்கள் மரணித்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன் என்று கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்த அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்னானில்லாஹி வஇன்ன இலைஹி ராஜுஊன். மருதமுனை ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களில் முதன்மையானவராகவும்...
நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிலாளர் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த “Essential Soft Skills for Management Assistants and Allied Grade Staff” என்ற தொனிப்பொருளிலான பயிற்சி பட்டறை ஒன்று காஞ்சிரங்குடா கால்நடை வளர்ப்பு விவசாய பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் பேராசிரியர் சல்பியா உம்மா தலைமையில் இடம்பெற்றது. ஊழியர்கள் தங்களது கருமங்களை இலகுவாக ஆற்றுவதற்கான பல்வேறு யுக்திகளை பயிற்சி பட்டறையின் வளவாலர்களாக...
  மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் உரிய வடிகான் வசதிவாய்ப்புக்கள் இன்மையால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையால் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெகுவாக உயர்ந்துள்ள குளங்களில் நீர்மட்டம் இதன்போது மட்டக்களப்பிலுள்ள வெல்லாவெளிக்குளம், கோவில்போரதிவுக்குளம்,பெரியபோரதீவுக்குளம், பழுகாமத்திலுள்ள குளங்கள், மகிழூர், குருமண்வெளி, குருக்கள்மடம், களுவாஞ்சிகுடி, கதாவளை, உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளன. அத்துடன் பெரிய குளங்களில்...
  போர் முடிந்தவுடன் ஒரு நபரை கடத்தி அவரை இரகசிய கடற்படை முகாம் ஒன்றில் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அண்மையில் கைது செய்யப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேரலாலகே சாந்த சமரவீர...
  பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பப்பட்டமைக்கு எதிராக வவுனியா, சாளம்பைக்குளம் அல்-அக்ஸா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது சாளம்பைக்குளம் அல் -அக்ஸா பாடசாலைக்கு முன்பாக இன்று (18.12.2023) நடைபெற்றிருந்தது. ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...
  கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை நடத்தப்படுகிறது. இந்திய வைத்தியர்களின் வருகை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த...
  மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கடும் தொணியில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்றைய தினம் (18.12.2023) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பர் மாதம்...
  வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் தனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை இன்றைய தினம்(19.12.2023) நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு...