வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தக சங்க வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் நடவடிக்கை
வவுனியா நகரில் கண்டி வீதி,பஜார் வீதியில் அண்மையில் வர்த்தக நிலையங்கள் சில உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு பகுதிகளில் திருட்டில்...
புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது.
இதன் போது வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று(18) குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் புதிய அதிபர் நியமனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கையளிக்கப்பட்ட மகஜர்
அத்துடன் கல்வி அமைச்சின்...
கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர்யாழ்ப்பாண மாவட்டத்தில்பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த...
தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், மாத்தறை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விரிவுரையாளர், தான் தத்தெடுத்த ஐந்தரை வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
விரிவுரையாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சிறுமியை பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார்...
கொக்கல சிங்கதீவர கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிதிகம அஹங்கம பகுதியைச் சேர்ந்த
நிரோஷ் அசேல ரங்ககுமார என்ற 29 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
திருமணத்திற்கு தயாரான இளைஞன்
நண்பர் ஒருவரின் திருமணத்தை பதிவு செய்வதற்கான சாட்சி கையொப்பமிட்டுவிட்டு, குறித்த நண்பரும் மேலும் இரு நண்பர்களும் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
சாட்சியத்தில் கையெழுத்திட்ட நண்பர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்...
ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.
அதன்படி, உரிய பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனு தாக்கல்
தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியாக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,...
தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதனால் சமூகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், இலங்கையிலுள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சின் சுற்றறிக்கை
0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தாயின்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் வாழ்த்து
நேற்று(18) காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் எச்சரிக்கை
இதேவேளை, இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள்...
அலவ்வ பிரதேசத்தில் தனது தாயை இரும்புக் கட்டையால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே பகுதியில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் கொலை
சந்தேகநபரின் தாக்குதலால் தாய் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மகன் மாபோபிட்டிய பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக...