அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு நடிகைக்கும் விருதுகளை பெற்று தந்தது. அதன்பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். பின் குஷி, தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், திருமலை, சந்திரமுகி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என வரிசையாக முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார். நடிகர் சூர்யாவை...
  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் 90ஸ் காலகட்டத்தில் இருந்து 2002 வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் அதன்பின் எந்த ஒரு திரைப்படங்களும் நடிக்கவில்லை. திருமணத்திற்கு பின் கணவர், பிள்ளைகளுடன் செட்டிலாகிவிட்டார். இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்....
  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 சம்பளமாக பெற்று வந்தவர் அப்படி விளம்பரம், நாயகி என தனது உழைப்பால் உயர்ந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் இப்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்க தொடங்கியுள்ளார். இவரது சினிமா பயணம் தற்போது பின்தங்கியுள்ளது காரணம் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆக்டீவாக இல்லை. அதற்கு பதில் போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது...
  காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர்...
  உலகில் மிக ஆபத்து நிறைந்த புலம்பெயர் வழிகளில் ஒன்றாக மத்திய தரைக்கடல் பகுதி வழியாக லிபியாவின் ஜ்வரா நகரில் இருந்து படகு ஒன்றில் 86 பேர் அகதிகளாக புறப்பட்டுள்ளனர். குறித்த படகில் பெண்கள், குழந்தைகள் என பலர் பயணித்து உள்ளனர். இந்நிலையில், திடீரென படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.இதன்போது பயணித்தவர்களில் சிலர் நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளனர். சிலர் கடலில் குதித்து நீந்தி கரைக்கு சென்றனர். எனினும், அகதிகளில் 61 பேர் நீரில் மூழ்கி விட்டனர் என...
  அமெரிக்கா - ஓரிகான் பகுதியில் ஒற்றை இயந்திரம் கொண்ட சிறிய விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்று மாலை 5 மணியளவில், மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது. இதன் போது 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது. அந்த பகுதியில் உயர் மின்னழுத்த மின்...
  ஜப்பானின் அதன் அண்டை நாடுகளான சீனா, வடகொரியா போன்றவற்றிடம் இருந்து அவ்வப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையை எதிர்கொள்ள நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியை ஜப்பான் அரசாங்கம் கோரியது. எனவே ஜப்பானுக்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அதன்படி சுமார் ரூ.489 கோடி மதிப்பிலான சைட் விண்டர் ஏவுகணை உள்பட பல்வேறு நவீன ஆயுதங்களை வழங்க...
  ரஷ்யாவில் எதிர்வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் மாா்ச் 17-ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் விளாதிமீா் புதின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவா் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ரஷ்யாவில் சுமாா் 25...
  காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளனர். பிரம்மாண்ட சுரங்க பாதை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய சுரங்க பாதை அமைப்பை கண்டுபிடித்துள்ளது. கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்துள்ள இந்த சுரங்கப்பாதை அமைப்பு Erez எல்லை கடப்பு பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தொடங்குவதாக...
  கனடாவின் ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரொறன்ரோவில் வாடகைத் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வந்தது. எனினும் அண்மைய இரண்டு மாதங்களாகவே வாடகைத் தொகை ஒப்பீட்டளவில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.எனினும், கனடாவில் வாடகை...