ரஷ்யாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராய்ட்டா்ஸ் கூறியுள்ளதாவது,
ரஷ்யாவில் வரும் மாா்ச் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் தற்போதைய அதிபா் விளாடிமிர் புதின் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.
ரஷ்ய மக்கள் மனங்களை வென்ற புடின்
அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவா்...
கனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் : இலங்கையில் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகள்
Thinappuyal News -
கனடாவில் கன்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
1980களில் கனடாவிற்கு பெருமளவு புலம்பெயர்ந்த தமிழர்களை முதலில்...
இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(17.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 40 வயதுடைய சிவபாதம் சிவசுதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தவறான முடிவெடுக்கும் போது அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன்...
ஒரு கோடியே 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று (17) நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் ஒழிப்பு குழு
இந்த பணிப்புரையின் கீழ் இன்று (17) காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம்...
பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (17.12.2023) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே 20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
மேலும், சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதன்வயல் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று முன்தினம்(16.12.2023) இடம்பெற்றுள்ளது.
குமுழமுனையில் இருந்து தண்ணீரூற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மாஞ்சோலையிலிருந்து குமுழமுனை வீதிக்கு நுழைந்த உழவு இயந்திரமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி முன்னெச்சரிக்கை
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் காயங்களுக்குள்ளானதோடு அவர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மழைக்காலம் என்பதால் உழவு இயந்திர சாரதி முன்னெச்சரிக்கை இல்லாது வீதிக்குள் நுழைய...
பொலிஸாரின் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் விசேட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விசேட பாதுகாப்பு நடவடிக்கை
மேலும் கூறுகையில், போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 45 பேர் போதைப்பொருள்...
தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதா சுகாதார அமைச்சக அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2019-2020 உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிப் பரீட்சையை சுகாதார அமைச்சு மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் மாணவர் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அனுப்ப...
வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரொம்புவ, பத்ராவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம பொலிஸ்
ஒரு சிலர் வெள்ளை வேனில் வந்து, தாங்கள் பண்டாரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் எனவும், வீட்டை சோதனையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் பின்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியே...
பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யட்டிகலொலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் மகள் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் நேற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காதல் தொடர்பு
10ஆம் தரத்தில் கல்வி கற்கும் தனது மகளுடன் இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக மாணவியின் தாய்...