கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நான்கு மற்றும் ஐந்து வயதான இரண்டு ஆண் குழந்தைகளை இந்தப் பெண் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
படுகொலை
பொலிஸாருக்கு கிடைக்க தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில்...
போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார்
இதன்படி, சந்தேகநபர் தொட்டலங்காவில் உள்ள மெத்சண்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் இருந்து இந்த போதைவஸ்து கடத்தலை நடத்தி வந்துள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
குறித்த நபர் கைது செய்யப்பட்டபோது பல மில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட 100 கிராம் மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான...
கனமழையினால் பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.
கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டமானது வான் பாய ஆரம்பித்துள்ளதன் காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நீர் நிறைந்து வீதிக்கு மேலாக பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
முழுவதும் சூழ்ந்த வெள்ள நீர்
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர்...
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரைக்கும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா...
பலபோவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை வாளால் தாக்கி பலத்த காயப்படுத்தி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், சந்தேக நபரை வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
நீண்ட நாள் தகராறு ஒன்றின் அடிப்படையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கை பரிசீலனை செய்த அத்தனகல்ல நீதிமன்ற நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
மயிலத்தமடுவிற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர்...
வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
60 வயதை பூர்த்தி செய்த விசேட வைத்திய நிபுணர்களை ஓய்வுறுத்துமாறு அமைச்சரவை கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.
நீதிமன்றில் மனுத்தாக்கல்
இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி 176 விசேட வைத்திய நிபுணர்கள்...
மகிந்தவின் மாநாடு குறித்து சர்ச்சை : மக்களுக்கு பெருந்தொகை பணத்தை வாரி வழங்கும் பசில்
Thinappuyal News -
பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு வருவதற்கு மக்களுக்கு வவுச்சர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது.
தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு இவ்வாறு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பிள்ளைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுச்சர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பண வவுச்சர்
மேலும் கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரம் வவுச்சர் வழங்கப்படும் என முன்னணி சோசலிஸ கட்சியின் விளம்பர...
நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் விஷேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும்.நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பொதுஜன பெரமுன வெற்றி
இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச....
புதிய காலி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே...