இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை-மத்திய வங்கியின் ஆளுநர்
Thinappuyal News -0
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி நிலை மேலும் உக்கிரமடைந்திருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. அச்சந்தர்ப்பத்தில், கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே நடைபெற்றது.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற...
நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனப் பகுதி மற்றும் கன்னெலிய பகுதி நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான மழை
மேலும், நீர் வீழ்ச்சிகளைக் கொண்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே நீர் நிலைகளில் குறிப்பாக நீர் வீழ்ச்சிகளில் நீராடுவது மற்றும் நீர் நிலைகளில் இறங்கும்...
முட்டை இறக்குமதிக்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் அனுமதியினை வழங்கியுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடிக்கு இன்று(16.12.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் இவ்வாறு மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை செய்கைகள்
இதனால் 800 கன அளவு நீர் வெளியேறி வருவதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு வான் கதவுகள் திறந்துள்ளமையால் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளாண்மை செய்கைகள்...
இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடை அணிந்து வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் எந்தவொரு சாரதியும் அடையாள அட்டையை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியாட்கள் சிலர் பொலிஸாரின் பெயரில்...
மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள், இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இந்தப் பகுதிகளில் சில...
கடந்த 2019 ஆம் ஆண்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 107 கிலோகிராம் போதைப்பொருட்களை எரித்து அழிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போதைப்பொருட்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பலாவியில் அமைந்துள்ள இன்சி சீமெந்து தொழிற்சாலையிலுள்ள கிடங்கொன்றில் எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தொகையை கொண்டு செல்வதற்காக விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த ஹெரொயின் தொகை கடந்த 2019 ஆம் ஆண்டு...
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அரசியல் ஸ்திர நிலையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதென தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தின் வரவு செலவு முகாமைத்துவத்துக்கான பின்னணி உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்...
பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அலையினால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
சுமார் 20 படகுகள் சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதால் பல படகுகள் சேதமடைந்தன.
இதேவேளை, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில்...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீருக்கு அதிகளவான கேள்வி இருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 200 இளநீர் கொள்கலன்கள் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், முதன்முறையாக தோட்டப் பயிர்களாக பயிரிடப்பட்ட இளநீரை ஏற்றுமதி சார்ந்த பயிராக பயிரிட விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு இன்று (14) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி முருதவெல மேல் பிரதேசத்தை இலங்கையின் முதலாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக...