கனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட கனடிய பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கனடாவின் பீட்டர் ப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணை இந்த நபருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மூன்று பிரிவினை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து...
  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அக்கட்சியின் தலைவர்களிடையே கடும் போட்டி உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப், மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து, கட்சியினரிடையே ஆதரவு திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா முன்னாள் கவர்னர்...
  உலக நாடுகள் ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் விரும்புகின்றன. அமெரிக்காவும் கட்டாயம் போர் நிறுத்தம் தேவை என்கிறது. அத்தோடு கத்தாருடன் இணைந்து பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் பயனாகத்தான் ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்திருந்த சுமார் 90 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 270 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதுடன்,...
  கனடாவின் ரொறன்ரோ பகுதியில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவருக்கு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. கட்டுமான பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கு இவ்வாறு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். வெற்றி இலக்கங்களை பரீட்சித்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.தமது வெற்றியிலகங்கள் சரியானவை என வேறு ஒருவரின் உதவியுடன்...
  உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ஜனவரி முதல் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என்று கென்ய அதிபர் வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இருந்து கென்யா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நைரோபியில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் (electronic travel...
  யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (14.12.2023) மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது. கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நுழைந்த இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாக்குதல் சம்பவம் அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது...
  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை தோன்றினால் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் ஒருவரை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கருத்து வேறுபாடுகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன்...
  பொதுஜன முன்னணியின் பலம் இன்றைய தினம் நிரூபிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாம் பேராளர் மாநாடு இன்றைய தினம்(15.12.2023) நடைபெறவுள்ளது. பசில் ராஜபக்சவின் தலைமை இதற்கமைய சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை வெற்றியை நோக்கி நகர்த்தும் வேலைத்...
  கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து பெறப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம் காணும் ஆய்வுகள் ஆரம்பமாகவுள்ளன. குறித்த ஆய்வு நடவடிக்ககைள் அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் தகவல் இந்நிலையில், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல்...
  விசுவமடு, தொட்டியடி மேற்கு பகுதியிலுள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்கள் நாசம் செய்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 இலட்சம் ரூபாய் நட்டம் தோட்டத்துக்குள் நேற்றிரவு 07மணியளவில் புகுந்த நான்கு யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரை ஏக்கர் வாழை திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 பெருமதி மிக்க வாழைகுட்டிகள் வழங்கப்பட்டு அதில் 225...