ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹோமாகம, கலவிவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீட்டில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
பதிலளிக்காத காதலி
வேலை முடிந்ததும் காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்பேற்படுத்தியுள்ளார். ஆனால் காதலி...
கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது சாரதியும் அவரது இரண்டு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், விபத்தில் மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்து வீதமான ஆண்கள் வீட்டு வன்முறைகளுக்கு உள்ளாகுவதாக குடும்ப சுகாதார செயலணி தெரிவித்துள்ளது.
வீட்டு வன்முறைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக மித்துரு பியச என்னும் 24 மணித்தியால அவசர அழைப்பு சேவையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகளவில் வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவசர அழைப்பு சேவை
0702611111 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எந்தவொரு நேரத்திலும் வீட்டு வன்முறை குறித்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சமூக ஊடக...
இலங்கை என்பது ஒரு விவசாய நாடு. விவசாயத்தினை மேம்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு உரிய அமைச்சர், நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட எங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கின்றது இல்லை என்று யாரும் சொல்லவில்லை.
அரசாங்கத்தின் நிர்ணய விலை
இருந்தாலும் மொத்த தேசிய உற்பத்தியிலே 25 வீதத்தை கிழக்கு மாகாணம் வழங்கும் நிலையில் அதிலும் அம்பாறை மாவட்டம் மொத்த உற்பத்தியில் சுமார் 22 வீத உற்பத்தியை வழங்கிக்...
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் அனைத்து ஆதரவு கட்சித் தலைவர்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள அனைத்து...
வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
17 வயதுடைய சிறுவன்
காயமடைந்தவர்களில் 17 வயதுடைய சிறுவனும், பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்று (14) இரவு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.
இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில்...
இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வான் கதவுகள்
இரணைமடு குளத்திற்கு மேல் பகுதியில் 100 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளத்தை நோக்கி அதிக நீர்...
வரி வருமானங்களை முறையாக சேர்க்கும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கே இருக்கிறது.அதனை செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,''நாட்டின் மொத்த வருமானம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை...
இரு வாரங்களுக்குள் தனித்தனியாக எந்தெந்த பொருட்கள் அந்த வகைகளில் உள்ளடங்கும் என்பது நிதி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். வரி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இலக்கை எம்மால் அடைய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபத ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விரைவில் கிடைக்கவுள்ள டொலர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது கடன் மறுசீரமைப்பு...