இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பல பகுதிகளில் கனமழை
காற்றுச் சுழற்சியானது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்...
துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவ மற்றும் தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதாகினர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் 07 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளில் மோட்டார் சைக்கிள், 02 மன்னா கத்திகள்,...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பகுதியில் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் பொலிஸாருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே, வாகனத்தில் இருந்து 07 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து வாகனத்தில்...
ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தயக்கத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானம்
இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதேசமயம், வரி அதிகரிப்பின் காரணமாக இந்த தீர்மானத்தை தயக்கத்துடன் எடுக்க நேரிட்டது என தெரிவித்துள்ளார்.
மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி குறித்த நபர் தனிமையில் தனது வீட்டில் இருந்துள்ளதாகவும், இதன்போது மதுபோதையில் அங்கு வந்த மருமகன் (அக்காவின் மகன்)அவரைத் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...
வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளதுரை வெலேவத்தையில் வசித்து வந்த வினிதா ஜெயசுந்தர என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
தாய் வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த நிலையில்
அவர் தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மகள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது,தாய் வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த நிலையில் கிடந்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கஹவத்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு...
சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் போது அவர்கள் பயன்படுத்திய 02 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகள் என்பன...
மீசாலையில் கடை கட்டிடத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீசாலை - இராமாவில் பகுதியில் நேற்று(13) இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின் ஒழுக்கினால் விபத்து
இந்நிலையில், கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
சம்பவம்...
“பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செபாலிகா...
ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினுடைய மூன்றாம் வாசிப்பான நேற்று (13) கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதற்கான காரணம் ஜனாதிபதி கடந்த வருடம் 04.02.2023 அன்று அதாவது 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களினுடைய தேசிய...