மழையுடன் கூடிய வானிலை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய கிழக்கு, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை...
  சிவில் பாதுகாப்பு திணைக்களம் எந்தவகையிலும் கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஆளும் கட்சியினர் இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளனர். சிவில் பாதுகாப்பு திணைக்களம் கலைக்கப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க, சிவில் பாதுகாப்பு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்போது திணைக்களத்தை கலைப்பதில்லை என ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் இது குறித்து தொடர்ந்தும் பேச...
  25 வருடங்களில் தரமான தனியார் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படவில்லை.ஆனால் சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது. டொலரின் பெறுமதி டொலர் பெறுமதி உயர்வால், 5.5 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபாய் வரை இருந்த நிலையான பேருந்தின் விலை, தற்போது 13.7 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. தனியார் துறையிடம் முன்னர் 20,000 பேருந்துகள் இருந்தன, இப்போது அவை 17,000 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் பேருந்துகளுக்கு...
  கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022ல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்...
  தேசிய கண் வைத்தியசாலையில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (14.12.2023) இடம்பெறவுள்ளதாக சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வேலைநிறுத்தம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிருவாகியின் முறைகேடுகள் வேலைநிறுத்தம் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு...
  சமூக பிறழ்வான காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணை இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாகவும், இருவரும் பட்டதாரிகள்...
  வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. போஞ்சி, கரட், லீக்ஸ், மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மரக்கறி சந்தை இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற விலையை விட அதிகரித்த விலையிலேயே மரக்கறிகள்...
  ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ வலியுறுத்து இதை போல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரிக்க குழுக்களை நியமிக்கவேண்டும் என சஜித் பிரேமதாஸ...
  பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இந்தியா வெங்காயம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளமையே இதற்கான காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பெரிய வெங்காய...
  தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது மாணவியை, காதலன் எனக்கூறிய இளைஞன் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மத்துகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவி ஹொரண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். முச்சக்கர வண்டியில் கடத்தல் இந்த நிலையில் தனது 44 வயதுடைய தாயுடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து வந்து கொண்டிருந்த போது சந்தேக நபர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் வந்துள்ளதாக தாயார்...