சீ.வி.கே சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல
FAROOK SIHAN கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில்  எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது. இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் இணைந்திருந்தனர். மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், கல்முனை வடக்கு...
  இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று மாலை தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருசதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் நேற்றையதினம் (12.12.2023) இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், இ.போ.ச. சாரதி மீதும் பேருந்து நடத்துனர் மீதும் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்து...
  நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலட நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. சபை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பக்கம் இருந்து திடீரென கூச்சலிட்டவாறு இருவர் சபாநாயகரை நோக்கி சென்றதோடு இரு கண்ணீர் புகை குண்டுகளையும் எரிந்துள்ளனர். பின்னர்...
  சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு...
  நாடாளுமன்றத்துக்கு அருகே பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிக வருமான வரி விதிப்புக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வங்கிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகே போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் இதனால் பொல்துவ சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தப் போவதில்லை என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மனு...
  கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஆண்டுகளில், இந்த காலப்பகுதியில் இதுபோன்ற மழை எமக்கு கிடைக்கவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் மழையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் அதிகளவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடுய...
  ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கடந்த 1ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்ட பின்னர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வௌிநாடு சென்றிருந்தார். வௌிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் சென்றிருந்தார். சர்ச்சைக்குரிய கருத்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வௌிநாட்டில்...
  Corning Inc நிறுவனம் Gorilla Glass உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற தொழில்நுட்பங்களின் திரைகளுக்கு மேல் பயன்படுத்தும் கண்ணாடி தான் இந்த கொரில்லா கண்ணாடிகள்(Gorilla Glass ). இந்த கொரில்லா கண்ணாடிகள் எளிதில் உடைந்து விடாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இவை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடன் நேரடி நன்மதிப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் ஐபோன்கள் மற்றும் பிற ஸ்மார்ட்போன்கள்...