திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இத்தேர்தலில் மைத்திரியின் முகவராக செயற்படவென நியமிக்கப்பட்ட ஆளுனர் ராகவன் தமது செயற்பாடுகளை அத்திசை நோக்கி ஆரம்பித்துள்ளார். இருவரும் ஏட்டிக்குப் போட்டியாக நாளொரு வண்ணம் விடும் அறிக்கைகளும், மலர்மாலை மேளவாத்திய ஊர்வலங்களும் வடக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.
இலங்கைத் தமிழரின் அரசியல் போராட்டம், அரசியல் தீர்வு முயற்சி, அரசியல் விடிவுக்கான செயற்பாடு என்பவை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்வைக்கப்படவுள்ளதாக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைக்கால போக்குகளையும், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சித்ததாகக் கூறப்படும் சுதந்திரகட்சியின் பதினைந்து தொகுதி அமைப்பாளர்கள் உட்பட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியையும் நீக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென நிலைதடுமாறி குடைசாய்தமையால் விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குறித்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியினை இனைக்கும் பெயார்வெல் தோட்டபாதையில் அமைந்துள்ள தோட்டத்தில் பிரதான பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி சுமார் 500க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாலத்தினூடாக நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்வதுடன் சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தினை பயன்படுத்தியே பயணம் செய்கின்றனர். ஆனால் குறித்த பாலம் இரண்டு வருட காலமாக உடைந்து அபாயகரமான...
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும்...
அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
வடகொரிய பிரதிநிதியொருவரை டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
பெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார் என டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தைகள் எங்கு இடம்பெறும் என்பதும் திகதியும் பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவின் அணுவாயுதங்களை கைவிடும்...
இனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று காலை மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்தே, குறித்த சடலம் மகியங்கனையில் மீட்கப்பட்டது.
35 வயதை மதிக்கத்தக்க இந்நபர்,அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
இச் சடலம் தற்போது, மகியங்கனை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மகியங்கனைப் பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.
கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து வழங்கிய தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
Thinappuyal -
சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு உணவுப் பொதியுடன் ஹெரோயின் போதைவஸ்து மற்றும் சிகரட்டுக்களை வழங்கிய, கைதியின் தந்தையை சிறைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மெதகமை சிறையிலிருந்த கைதி ஒருவருக்கே, உணவுப் பொதியுடன் மேற்படி பொருட்கள் வழங்கப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. பலாத்கார பாலியல் வல்லுறவு மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், சிறை வாசம் அனுபவித்து வந்த கைதிக்கு, அவரது தந்தை உணவுப் பொதியுடன் சிகரட்டுக்கள் ஐந்து,...