சில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்த வேண்டும் என கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் முதலில் நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது. அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அந்தவகையில் முதலில்...
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஜெனரல் சன்டென்டர் பொலிஸ் கல்லூரியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கல்லூரியின் சுவரில் மோதி வெடிக்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பயிலுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள்...
பொருளாதார நிலையில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல் செய்துள்ளது. தி.மு.கவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி பொது பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல.பொது...
ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட சிலர் தன்னை அணுகியமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஆட்ட நிர்ணய சதி கும்பல்களை சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர்  என தெரிவித்துள்ள அமைச்சர்,  அவர்கள் இலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவத்துவதற்கு நான் முன்வந்தால் எனக்கு  இலஞ்சம் தருவதற்கு தயார் என குறிப்பிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். நான் இது குறித்து ஏற்கனவே ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்பு பிரிவின்...
யாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பணத்தில் இருந்து நேற்றையதினம் 1.30 மணயளவில் கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற நகர்சேர் கடுகதி குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். அரியாலை, நாவற்குழி பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வயல்வெளிகளுக்கு ஊடாக சென்று  கொண்டிருந்த போது, குறித்த வயல்வெளிகளின் ஊடாக வந்த நபர்...
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை  கடற்படை தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் டேவிட் அஷ்மான் (Colonel David Ashman) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்படை தலைமையகத்தில் நேற்று (18.01.2019) இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லும் குறூப் கப்டன் ப்ரேசர் நிக்கல்சனும் (Group Captain...
வவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸினர் வழிமறித்து தமது நேரத்தில்...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் மனித உரிமை பேரழிவு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்சிற்கான ஆராய்ச்சியாளர் கார்லொஸ் கொன்டே, உலகின் எந்த நாடும் இதனை பின்பற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தை வெறுமனே குற்றச்செயலாக மாத்திரம் கருதி முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்களிற்கு...
பொதுஜன பெரமுன முன்னணி  எதிர்வரும்  தேர்தல்களில்   எச்சின்னத்தில்  போட்டியிடும்  என்பது   தொடர்பில்  விரைவில்  கட்சியின்  தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி  சிறந்த    தீர்மானம்   முன்வைக்கப்படும். கட்சியின்  உள்ளக  ஜனநாயகத்தை  மதிப்பதுடன்  சகோதர    கட்சிகளின் கருத்துக்களுக்கும்  மதிப்பளிக்க  வேண்டும்  என  பொதுஜன பெரமுன முன்னணியின்  ஸ்தாபகர்   பசில்   ராஜபக்ஷ  தெரிவித்தார். பொதுஜன பெரமுன  முன்னணி  இடம்பெறவுள்ள   தேர்தலில்  மொட்டு  சின்னத்தில் போட்டியிட  வேண்டும்  என்பதை   உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்  என்ற கோரிக்கை  மனுவை ...