2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
எனினும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டது.
எனினும் எமது அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை நூல் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
சம்பத் பண்டார என்பவரால் எழுதப்பட்ட அந்த சுயசரிதையை சீனப் பேராசிரியர்கள் வான் யூவும் ஜின் ஷின்யின்னும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள்.சரசவிய பிரசுராலயம் பெயாஜிங்கில் உள்ள யான்சின் பப்ளிசேர்ஸுடன் இணைந்து நூலை பிரசுசித்திருக்கிறது.
நூலின் பிரதி இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவரின் சுயசரிதை சீனமொழியில் வெளிவந்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டலும் அதில் பல தூரோகிகளும் இணைந்துக் கொள்ளப்பட்டனர் குறிப்பாக ரெலேர், புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களின் தலைவர்களையும் சுட்டுக் கொல்லுமாறு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பொட்டு அம்மான் அவர்களிடமும், கருணா அம்மான் அவர்களிடமும் பணித்திருந்தார். இன்றையே நிலையில் துரோகி என்கின்ற பொழுது அதன் காரணங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
தமிழ் மக்களுக்கான தேசியம் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்ட நிலையில் அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை அன்றையதினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அன்று மாலை...
வவுனியா, நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட...
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.
புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு...
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கிற்கு சவாலான விடயங்களாக போலியான தகவல்கள் பரப்பப்படுதல் மற்றும் அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் என்பன காணப்படுகின்றன.
இதற்காக பல போலியான கணக்குகளும் உருவாக்கப்படுகின்றன.
இதனைத் தடுப்பதற்காக பேஸ்புக்கின் விசேட குழு தீங்கு பயக்கும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் என்பனவற்றினை நீக்கி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது 500 வரையிலான பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளது.
இக் கணக்குகளின் ஊடாக போலியான செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும், இதற்காக பெருமளவிலான பணம்...
காலையில் அதிகளவு உற்சாகத்தை தருகின்ற பானமாக கோப்பி விளங்குகின்றது.
உலகளவில் 124 வகையான கோப்பி இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் இரண்டு வகையான கோப்பி இனங்களே பானமாக உள்ளெடுக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்படியிருக்கையில் இவ் வகை கோப்பி தாவரங்கள் விரைவாக அழிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில் காணப்படும் ஐந்தில் ஒரு தாவரங்கள் விரைவாக அழிவடைந்து வருவதாகவும், அவற்றுள் 60 சதவீதமானவை மிக விரைவாக அழிவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அழிவடையும் தாவர வகைகளில்...
ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானதில், சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம்...
ஆஸ்திரேலியாவின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்த டேவிட் வார்னருக்கு போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை சொந்த நாடு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் வார்னர் தற்போது ஒருவருட தடையில் இருக்கிறார். இதனால் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.
சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்,‘‘காயம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியா திரும்பும்...